பக்கம்:கனிச்சாறு 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  119

மக்களே என்றால்
வெறும் அர சியல் நோக்கு எதற்கு?
வேற்று நாட் டினர்எனில்
பாலத் தீனர்,ஆப்
பிரிக்கருக் கிரங்குதல் எதற்கு?

-1991



104 
ஆகுமோ உலகு, அவள்
அழிவிலாப் புகழ்க்கே?


மானமும் உயிரும் வாழ்வும் கருதி
வானமும் நிலமும் நீரும் கடந்து
கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து
தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட
ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும் 5
மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள்
ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக்
காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை -
தன்னையும் இழந்து தமரையும் இழந்த
அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி - 10
தானுவென் பெயரினள் தன்னினம் அழித்த
வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம்
நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு
ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த
ஈக மன்றோ ஈகம்! 15
ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே?

-1992

(திணை : மூதின் முல்லை, துறை : அறங்கூர் மறம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/148&oldid=1424641" இலிருந்து மீள்விக்கப்பட்டது