பக்கம்:கனிச்சாறு 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


38  பாப்பா படி!

பாப்பா பாப்பா படி!
பாட்டும் கதையும் படி!

அம்மா சுட்டாள் தோசை!
அதன்மேல் இல்லை ஆசை!

பாட்டும் கதையும் வேண்டும்!
படிப்பே அறிவைத் தூண்டும்!

விளக்கே இருளைப் போக்கும்!
வெளிச்சம் எங்கும் சேர்க்கும்!

படிப்பே மடமை ஓட்டும்!
பரந்த அறிவைக் கூட்டும்!

பாப்பா பாப்பா படி!
பணிவும் அன்பும் படி!

-1970


39  யானை!

ஓடிவாடா! ஓடிவாடா!
யானை பார்க்கலாம்!
ஆடிவரும் அசைந்து வரும்
அழகைப் பார்க்கலாம்!

தம்பி வாடா! நம்மைப் பார்த்துத்
தலையை ஆட்டுமாம்!
தும்பிக் கையைத் தலைக்கு மேலே
தூக்கிக் காட்டுமாம்!

கரும்பு தந்தால் வாங்கிக் கொள்ளக்
கையை நீட்டுமாம்!
குறும்பு செய்தால் கூச்சல் போட்டு
நம்மை ஓட்டுமாம்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/70&oldid=1424873" இலிருந்து மீள்விக்கப்பட்டது