உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


உள்ளமெனும் அன்னையெனக்குரைத்தவிடை யிஃதாம்!
உற்றவிடை கேட்டதன்பின் உடல்முழுதும் காந்த
வெள்ளமெனும் பேருணர்வால்சிலிர்சிலிர்க்க நின்றேன்!
விளக்கமிலாப் பலநிலைகள் விளங்கிடவும் கண்டேன்!
விள்ளரிய பெருமுழக்கம் என்னுளத்துள் கேட்டேன்!
வியனுலகப் பொருளனைத்தும் ஒன்றெனவு ணர்ந்தேன்,
எள்ளவொரு பொருளுமிலை; வாழ்த்தவொன்று மில்லை!
எண்ணவொரு நினைவுமிலை! மறக்கவொன்று மில்லை!

-1969

 


80

நடக்கின்ற செயலனைத்தும் நாடகமே!




நடக்கின்ற செயலனைத்தும்
நாடகமே என்றெண்ணிக்
கடக்கின்ற மெய்ந்நிலையைக்
கருத்தளவில் நாமுணர்ந்தால்
கிடக்கின்ற பொருள்களிலே
கீழேது மேலேது?
தடக்குன்றத் தோளுடையான்
தாள்பட்டுச் சிதறுவதே!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/148&oldid=1445417" இலிருந்து மீள்விக்கப்பட்டது