உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  127


83

விளையாட்டும் வாழ்க்கையும் !


வாழ்க்கைஎனும் விளையாட்டுள்
வந்து இ ணைந்த நாள்முதலாய்
வீழ்க்கைக்கும் வெற்றிக்கும்
விசை இயக்கம் மாறாதே!

விசை இயக்கம் மாறாமல்
விரும்புகின்ற ஆட்டத்தில்
திசை திரும்பிப் போகாமல்
தேர்ந்துவரல் வெற்றியென்போம்!

உனக்குகந்த விளையாட்டை
உளம்விரும்பி ஆடுதல்போல்
தனக்குகந்த கொள்கையிலும்
தழைத்துயர்தல் வாழ்க்கையன்றோ?

விளையாட்டுள் எதிரணிபோல்
விளைபயிர்க்குக் களைகளைப்போல்
முளைகாட்டும் கொள்கைக்கும்
முளைத்திடுவார் எதிரி பலர்!

எதிர்த்துவரும் தடைகளையும்
இடர்விளைக்கும் பகைவரையும்
விதிர்ப்பின்றி வெற்றிகொள்ளும்
வினையேதான் வாழ்வாகும்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/153&oldid=1445423" இலிருந்து மீள்விக்கப்பட்டது