உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ௦

கனிச்சாறு ஆறாம் தொகுதி


–இயற்கை–

54. பாவலரேறு உயர்நிலைப் பள்ளி மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தபோது, தம் 14-ஆம் அகவையில் எழுதிய பாடல் இது. 1952 இல் ‘பகுத்தறிவில்’ வெளி வந்தது. ஒரு தாளிகையில் அச்சேறிய முதல் பாடலும் இதுதான். எதுகையில் பொதிந்த ஓரிரு வடசொற்கள் களையப்படவில்லை, காலம் உணர்த்துகையால்.

55. அருவியின் அழகிய இயற்கை ஓவியமிது.

56. கடலைப்பற்றி எழுந்த இனிய கற்பனை இது.

57. இயற்கையைப் பற்றிப் பாடல் எழுதவா? என்று கேட்ட பாவலனிடம் மக்களைப் பற்றி எழுதுங்கள் என்று அறிவுறுத்துகிறாள் மனைவி. பாட்டைப் படியுங்கள்.

58. பரிதிக்குத் தாமரை இதழின்மீது இருக்கும் அன்புணர்வை விளக்கும் அழகிய இயற்கைப்பாடல்.

59. காற்றுடன் பேசுகின்றது பாட்டு. மக்கட்குப் பொதுமைச் சீர்திருத்தம் செய்யவும் காற்றை அழைக்கிறது.

60. கிள்ளும் பசியால் படுத்திருக்கையில் கண்ட கனவு கலைந்த அழகுறு இயற்கைக் காட்சி.

61. கடலின் அழகை விரித்துரைக்கும் அழகுக்காட்சி.

62. காவிரித்தாயின் அழகிய ஓவியமிது. இந்தப் பாடலைச் சிலர் வேறுவகையில் கையாண்டு திரைப்படங்களில் பாடியுள்ளனர். இருபொருளழகு வரப் பாடிய இப்பாடல் இயற்கையின் எழிலைச் சுவைபெற எழுதிக் காட்டுகிறது. 'தென்றலில்' கண்ணதாசன் முன்னுரையோடு வந்த பாடலிது.

63. 1959 சென்னைத் தமிழ் எழுத்தாளர் மன்றப் போட்டிக்கு விடுத்த பாடல் இது. பாராட்டும் பரிசும் பெற்றது. பாவலனின் உள்ளம் ஆட்டுவிக்கும் உணர்வுக் கூத்தைப் பாட்டின் ஒவ்வோரடியிலும் காணலாம். திரு.ம.இலெ. தங்கப்பாவின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் ‘வானம்பாடி’யில் வந்தது.

64. நிலவைப் பெண்ணாய்ச் சொல்லி உவந்து பாடிய அழகிய இயற்கைப்பாடல்.

65. முடிவுறாப் பாடலாய்ச் சுவடியில் இருந்தது

66. நெறியற்ற மாந்தர்க்கு நெறிமுறைகள் கூறும்படி வானப்பறவைகளையும் காட்டுவிலங்குகளையும் பட்டுப்பூச்சிகளையும் தாமரைப் பூக்குளத்தையும் தேனுண்ணும் வண்டினத்தையும் நீந்தும் மீனினத்தையும் பல்லி, தேள், பாம்பு போன்ற நச்சுயிரினங்களையும் இறைஞ்சி அழைக்கின்றது இப்பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/21&oldid=1445068" இலிருந்து மீள்விக்கப்பட்டது