உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  43


30

தற்காலக் கண்ணகி!


மாமலர் தடவிய தென்றல் வந்தே என்றன்
மார்பினைத் தடவுதல் போல் - நறுந்
தூமலர் மேனி யுடலினைக் கொண்டவள்
தோய்ந்தனள் மார்பின் மிசை ! - செந்
நாமலர்ந் தவளிரு விழிமலர்ந் துள்ளமும்
நன்கு மலர்ந்தவ ளாய்; - “ஒரு
பாமலர் தந்தென்னை மகிழ்விக்க” என்றனள்
பாடலுக் காட ஒப்பி!

“நீர்வழிந்திரு விழி சிவந்திருக்க குழல்
நீணிலம் புரளக் கையில் நல்
ஓர்தனிச் சிலம்பொடு அனல்தெறிக்கும் உயிர்
போங்கிட அவை புகுந்தோய், - நீ
ஆர் என” பாண்டியன் கேட்டதைப் பாடிட;
அரவமென்றே வுயிர்த்தே - தன்
வார்குழல் தாழ்த்தி யெழுந்தனள் மனைவி! - யோர்
வழக்குரைப் பாளாகினள் !

ஏதிது கண்ணகி போலும் நடித்திட
எழுந்தன ளோவென வே, - எண்ணி
யாதுரைப் பானெனக் காட்டி நடிப்பதை
யானங்கு பார்த்திருந் தேன்! •அவள்
“மோதுகடல் அலை இசைமுழக்கும் - கவின்
மாநகர்த் தென்புதுவை - இம்
மாதெவள் ஊர்! சங்கு நாதன்என் பார்க்கொரு
மகளாகப் பிறந்தேன்” என்றாள்.

கண்ணகி போலும் நடிப்பவள் ஆகிக்
கதையினைக் கூற வந்த - இப்
பெண்ணினைக் கண்டதும் நகைப்பினை அடக்கியே
பேசட்டும் என்றிருந் தேன்! - அவள்
“கண்ணிக ராக வளர்த்தனர் பெற்றவர்
காட்டுக்குள் தள்ளி விட்டார்” - இனி
எண்ணி முடிந்திடவில்லை ஐயோ மாமி
இழைக்கும் கொடுஞ் செயலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/69&oldid=1445131" இலிருந்து மீள்விக்கப்பட்டது