உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  67


51

வீடு மாற்றம்!


முதல்நாள்!

அதிர்ந்தது வண்டி! அன்னையும் நானும்
எதிர்ந்த வீட்டை எட்டிப் பார்த்தோம்!
ஒற்றை மாட்டு வண்டியங் கொன்று
சற்றுமுன் தள்ளிச் சந்தின் ஓரத்தில்
வந்து நின்றது!
                                    வண்டியுள் ளிருந்து
ஐந்தாறு பெட்டிகள், அண்டா, குண்டா,
பாய், தலை யணைகள், படுக்கை, மூட்டைகள்
ஏயும் சிறுசிறு பொருள்கள் இவற்றுடன்
புதுப்பெண் ஒருத்தி பொசுக் கெனக் குதித்தாள்!

கதுப்புக் கன்னம்! கண்ணாடி மாளிகை! 10
வட்ட நிலாமுகம்! வயிர விழிகள்!
கொட்டும் மழைமுகில் எனக்கருங் கூந்தல்!
மணம்வாரி இறைக்கும் மல்லிகைக் காடு!
குணந்தோய் பவழக் குலையெனும் இதழ்கள்!
பட்டுச் சேலை; பளபளக்கும் சட்டை;
அட்டிகைக் கழுத்து; வளையல் அடுக்கு;
காதுக் கம்மல்; கல்மூக் குத்தி;
தோதாய்ச் சுமந்த தோகை மயிலவள்!
மிதிவண்டி ஒன்று வந்து நின்றது!
குதித்தான் ஒருவன்; கொண்டன் போலும்! 20
பூட்டிய வீட்டைத் திறந்ததும் பொருள்களை
வீட்டின் உள்ளே விரைந்து வைத்தனர்!
வண்டிக் காரனும் வந்தவ னோடு
முண்டியும் தூக்கியும் முடுக்காய் உதவினான்!
எல்லாப் பொருள்களும் ஏகிய பின்றை
நில்லாமல் நகர்ந்தது, நெடுமணி வண்டி!

பக்கத்து வீட்டுப் பலகணி யெல்லாம்
எக்கி எக்கிப் பார்த்த தலைகளும்
மாடமே லிருந்து மறைந்து நோக்கக்
கூடிய விழிகளும் வாடிக் குலைந்திட 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/93&oldid=1445185" இலிருந்து மீள்விக்கப்பட்டது