பக்கம்:கனிச்சாறு 8.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  51


மற்றபடி தாசனென்றால் மாண்புகுன்றப் போவதில்லை.
கற்றபடி தானே கணக்குவரும்; பாட்டுவரும்!
நல்லபடி பாவேந்தன் தன்னை அளப்பதற்கு
வல்லபடி ஒன்றில்லை; வாய்த்தபடி தள்ளுபடி!
அப்படியாய்ச் செய்தி அளந்தபடி யாயிருக்க
எப்படி யாய்வீர் எழிற்பாவேந் தன்பாட்டை?
பாருங்கள், பாவேந்தன் பாரதிதா சன்திறத்தை!
ஓருங்கள்! நான்சொன்ன துண்மையா பொய்யாவென்
றப்போது சொல்லுங்கள்! ஆன்றமைவாய்க் கேளுங்கள்.
எப்போதும் காணீர் இடர்.

பாரதி தாசன் பகருவான் தன்னை:
‘நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்’
- என்றே
இதைவிடத் தன்னை எளிதாய் எவன்சொன்னான்?
புதைவிடந் தோண்டி ஆராய்ச்சி பண்ணி
இதோ,இவன் இப்படி; அதோ அவன் அப்படி
எனவோர் அறிஞன் இயம்பிட வேண்டும்!

மனத்தைத் திறந்து மற்றும் உரைப்பான்:
“சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
போர்த்திறத் தால்,இயற்கை புனைந்த ஓர் உயிர்நான்!

எப்படி அவன்திறம்? அவனே உரைத்தது!
அப்படிப் புனைந்த ஆருயிர் அவனுக்குக்
கைவரும் பாட்டுத் திறத்தைக் கணிக்கிறான்.
பொய்வரா வாயால் புகல்வதைக் கேளுங்கள்;

எப்படி அவன்றன் கொள்கை?
எப்படி அவன்றன் வேகம்?
தப்படி அடித்துத் தள்ளித்
தலைகீழாய்ப் பொய்யைப் பேசிச்
செப்படி வேலை செய்யும்
சிறுமதிப் புலவன் அல்லன்.
இப்படி நான், காண் - என்பான்.
இதுவேயென் கொள்கை என்பான்.
‘இருளினை வறுமை நோயை
இடறுவேன்’ என்பான்; இன்னும்
‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/65&oldid=1447933" இலிருந்து மீள்விக்கப்பட்டது