பக்கம்:கனிச்சாறு 8.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

அகர முதலியைத் தேடி அலையும்
பகற்கனா காணும் பாவலன் அல்லன்!
எண்ணிய பொழுதெலாம் எதிர்வந்து நிற்கும்
வண்ணச் சொற்கள்! வனைகின்ற ஓவியம்!
பாடிக் கொண்டே பறக்கும் வண்டுபோல்
நாடிக் கொண்டே நாட்டிடும் பாவலன்!
இதோ, பாருங்கள் இன்னொரு பாடல்!
எதோ, இதன்பொருளை எண்ணுங்கள் பார்க்கலாம்!

“இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும் செவ்வி தழ்கள்
விரியாத தாம ரைபோல்
ஓர்இணை! மெல்லி யர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம்!
காயாம்பூக் கொத்து! மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ!

உயிருள்ள அழகின் மேய்ச்சல்!”


அழகின் மேய்ச்சலை அறிந்துகொண் டீரா?
புலவர் மொழிகின்றார் பொருள்விளங் கிற்றா?
இருநிலா இரையுண்ணும் என்கின்றார் புலவர்!
கருங்கொண்டை இரண்டு; கட்டி ஈயம்!
தாமரை ஓர்இணை இருவா ழைப்பூ!
ஆம்,இவை புறாக்கள்; அறிந்து கொள்க!
பாடலை மீண்டும் படித்துப் பார்க்க!
ஆடலை - அழகின் ஆடலை - அருந்துக!
அடுத்து, அவர் உலகியல் அறிவைப் பார்ப்போம்.

‘வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களென்றால்

சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்’


என்கிறார் புலவர், என்ன சரிதானே?
தின்கிறோம் இவற்றைத் திரும்ப நினைத்தோமோ?

“வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள்,
ஆனது செய்யும் அநுமார்கள், சம்பவந்தர்,
ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்!
விஸ்வரூ பப்பெருமை மேலேறும் வன்மைகள்
உஸ்என்ற சத்தங்கள் அஸ்என்ற சத்தங்கள்

எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/76&oldid=1448039" இலிருந்து மீள்விக்கப்பட்டது