பக்கம்:கனியமுது.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'பொன்னய்யா, புளிவிலேதான் என்ன என்றேன்;

புலிவிலேயைச் சொல்கின்றீர் போலும் மேலும், என்னய்யா அரிசிவிலே என்ருல், நீரோ -

இங்கிலாந்தின் அரசிநிலை இயம்பு கின்றீர்! சின்னய்யா பருப்புவிலே கேட்டான், ஆளுல்

சீர்யானே மருப்புவிலே கூறி விட்டீர்! தன்னேயன்றி வேறெவரும் இல்லை என்ற

தருக்குடனே இருக்கின்றீர் அன்ருே? பாரும்'

முனைப்போடு கல்லூரிப் பட்டம் பெற்ற

முனியப்பன் ஊரார்முன் முறையிட் டானே! "தனிப்பட்டோர் வாணிபத்தை நடத்தி வந்தால்

தன்னலமும் தரமில்லாச் சரக்கும் மிஞ்சும்! இனிப்பான சொல்பேசி இலாபஞ் சேர்ப்பார்:

ஏராள சொத்துகளைத் திரட்டிக் கொள்வார்! தனிப்பாதை இனிப்போவோம் வாரீர்” என்ருன்,

தயக்கமுற்ருேர் மயக்கத்தைத் தெளிய வைத்தான்!

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/87&oldid=692021" இருந்து மீள்விக்கப்பட்டது