102
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
அன்று நடைபெற்றன. ஹைதர் இவற்றை ஊக்கியது மட்டுமன்றி, அதில் அடிக்கடி தானே முனைந்து ஈடுபடுவதுண்டு. மான் போர், யானைப் போர், வாண வேடிக்கை, குத்துச் சண்டை, மற்போர் ஆகியவற்றில், அவன் நேரடியாகச் சென்றிருந்து, பரிசும், பாராட்டும் வழங்குவதுண்டு. பரிசுப் போட்டி சண்டைகளில் ஒரு வகை, ஹைதர் நாட்களில் அவனால் பெரிதும் ஆதரிக்கப் பட்டது. அதில், கள் அருந்தப்பட்ட கழுதைகளுடனே, கட்டுண்ட புலி போருக்குத் தூண்டப்படும். இன்னும் சில சமயம், சிறந்த அபிஸீனிய வீரரோ அல்லது விரும்பும் வேறு பிறரோ, புலி, சிங்கங்களுடன் சண்டை செய்யும்படி ஏற்பாடு செய்யப்படும். சண்டைக்கான தனியிடத்தில், நடுவே ஒரு வாழை மரம் நடப்பட்டிருக்கும். சிங்கமும், ஆளும் அதைச் சுற்றி மாறி, மாறித் தாக்க வேண்டும். மர மறைவிலிருந்து, சிங்கத்தை வீரர் குத்த வேண்டும். சிங்கம் மாண்டால், வீரனை மன்னன் பரிசுகளாலும், பொன்னணி மணிகளாலும் மூழ்குவிப்பான். ஆனால், சிங்கம் வென்றால், வீரனுக்குப் பரிசு கிடைக்காது. ஆனாலும், பெரும்பாலும் ஹைதர் அரங்கில் இருக்கும் போது, வீரன் மாள்வதில்லை. ஏனென்றால், விலங்கு வெல்லும் சமயம், ஹைதரின் குறி தவறாத துப்பாக்கிக் குண்டுக்கு, விலங்கு இலக்காகி விழுந்து விடும். இத்தகைய தருணங்களில், பந்தயப் போரில் மன்னனே பங்கு கொண்டு, தன் திறமையைப் பயன்படுத்துவது உண்டு. அந்நாளைய மைசூர் மக்கள் எல்லையில்லாத மகிழ்வும், பெருமையும் உடையவராயிருந்தனர்.
தனி வாழ்க்கையிலும், நண்பர்களிடையிலும், ஹைதர் எல்லாருடனும் தாராளமாகக் கலந்து பேசும் இயல்புடையவன். அவன் தாய்மொழி கன்னடம். அதன் கொச்சைச் சொற்களை, அவன் மிக அடிக்கடி கையாளுவது வழக்கம்,