உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்

109

வளர்த்தான். இது கண்ட ஹைதர், “நண்பரே! இப்போது ஏன் தாடி வளர்க்கிறீர்? இனி என்னைக் காப்பாற்ற வாய்ப்பு ஏற்படாதென்றா?” என்று கேட்டான். என்ன காரணத்தாலோ, யாஸீன் அப்போது சுண்டிப் பேசினான். “தாடி, மீசையில்லாதவர்கள் பேடிகள் என்று கேள்விப்படுகிறேன் அரசே. அதனால்தான் தாடி வளர்க்கிறேன்” என்றான். ஹைதர் கேலிப் பேச்சைக் கூட உடனே நிறுத்தி விட்டான்.

ஒரு தடவை, படைத் தலைவன் முகமதலி படைத் துறைச் செலவுக்குப் பணம் கோரினான். நிதிக் கணக்கரும், அருகிலேயே இருந்தனர்.ஆனால், நாணய செலாவணி பற்றி, ஹைதர் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தான். அவன் எரிச்சல், படைத் தலைவன் பக்கமாகத் திரும்பிற்று. "படைச் செலவு, படைச் செலவு என்று மாதம் மூன்று தடவை பணம் வாங்குகிறீர். இவற்றை எல்லாம் என்னிடமிருந்து பறித்து, என்னை ஓட்டாண்டியாக்கி, கோடீஸ்வரனாகப் பார்க்கிறீர். எல்லாம் பார்க்கிறேன். உம்மைத் திருடனென்று சரியானபடி தண்டித்து, நீர் சேர்த்து வைக்கும் தங்கக் காசுகள் அத்தனையையும் பறிமுதல் செய்கிறேனா, இல்லையா பாரும்! போம், போம். இப்போது இங்கே நிற்க வேண்டாம்" என்றான்.

முகமதலி மன்னனிட மிருந்து முகந் திருப்பி நிதிக் கணக்கரை நோக்கினான். “நம் தலைவர், தாம் எல்லாம் அறிந்தவர் என்று நடித்து, நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். அவர் மண்டையில், மூளையில்லை என்பது நமக்குத் தெரியாதா என்ன? அவர் கிடக்கிறார். அரசாட்சியின் பொறுப்பு அவருக்கு என்ன தெரியும்? நீங்கள் பணத்தைக் கொடுங்கள்” என்று அமைதியாகக் கேட்டான்.

நிதிக் கணக்கர் விழித்தனர்.

“இந்தச் சனியன் பொல்லாத சனியன். கேட்ட பணத்துக்கு மேல், ஒன்றிரண்டு நூறு கொடுத்து ஒழித்துக் கட்டுங்-