உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலமும் களனும்

7

படுகிறது. ஆனால், அணிமை வரை மைசூர் என்பது ஒரு தனியரசின் பெயராகவே நிலவிற்று. ஹைதர் காலம் முதல்தான், இது இங்ஙனம் ஒரு முழுப் பகுதியாக இயல்கிறது. அதற்கு முன், அது பல குறுநிலப் பகுதிகளாகவே பிரிந்திருந்தது. முதல் முதல் அப் பெரும் பகுதியை ஒன்றுபடுத்தி, ஒரே அரசாக்கி, ஒரு குடைக் கீழ் ஆண்டவன் ஹைதரே! மைசூர் என்ற பெயரால் அப்பகுதி முழுவதும் அழைக்கப்பட்டதும் அக்கால முதல்தான்.

பழங்காலத்தில், மைசூர்ப் பகுதி கங்க நாடு என்றழைக்கப்பட்டது. இப்பெயர் கொங்கு நாடு என்பதன் மறு வடிவமேயாகும். இன்று கொங்கு நாடு என்ற பெயரை நாம் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களடங்கிய தமிழகப் பகுதிக்கு மட்டுமே வழங்குகிறோம். ஆனால் சங்க காலங்களில்—அதாவது, கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரை—இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே கொள்ளப் பட்டது. அதை அன்று, தென் கொங்கு நாடு என்று வழங்கினர். இன்றைய மைசூர்ப் பகுதி, வட கொங்கு நாடு என்றும், தென் கன்னட மாவட்டமடங்கிய மேல் கடற்கரைப் பகுதி, மேல் கொங்கு நாடு என்றும் குறிக்கப்பட்டன. இம் மூன்றும் சேர்ந்தே, பண்டைக் கொங்கு நாடு அல்லது பெருங் கொங்கு நாடு ஆயிருந்தது.

மைசூர்த் தனியரசு ஹைதர் நேரடியாக ஆண்ட பகுதியே. அவன் பேரரசாட்சியின் விரிவு, மேற்குறிப்பிட்ட பெருங் கொங்கு நாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன், பல சமயங்களில் அது அவ் எல்லை கடந்து மலபார் மாவட்டம், கொச்சித் தனியரசு, சோழ நாடு, தொண்டை நாடு, ஹைதராபாதின் பகுதி ஆகிய எல்லைகளிலும் பரவியிருந்தது.

தென்னாட்டில் எங்கும் முடியரசுகள் தோன்றுவதற்கு முன், குடியரசுகளும், குடிமன்னர் ஆட்சிகளுமே பரவியிருந்-