உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னக அரசியல் அமளி

23

நுட்பம் அவனிடம் இருந்தது. புஸி, லாலி போன்ற அவன் படைத் தலைவர்களிடம், அதற்குரிய தலைமைத் திறம், போர்ச் சாதனங்கள், படைத் திறம், வீரம் ஆகிய யாவும் இருந்தன. தவிர, டியூப்ளே தென்னக மக்கள் வீரத்தை அடிப்படையாகக் கொண்டே, பிரஞ்சுப் புகழ்ப் பேரரசு எழுப்ப முனைந்தான். தென்னக மக்கள், மன்னர் மரபுகள் ஆகியவற்றில் அவனுக்குச் செல்வாக்கும், நேசபாசமும் மிகுதியாகவே இருந்தது. ஆனால், இத்தனை வாய்ப்புக்களையும் விழலுக்கிறைத்த நீராக்கின, பிரஞ்சு தாயத்தில் இருந்த வாணிக ஆட்சியாளர்களின் தொலை நோக்கின்மை; நாட்டுப் பற்றற்ற குறுகிய பொறாமைப் போக்கு, ஆகியவை. இவையே, பிரஞ்சு மக்கள் கைப்பட இருந்த பேரரசை, அதனைக் குறிக் கொள்ளாத, அதில் நேரிடையான அக்கறையற்ற ஆங்கிலேயர் வசமாக்கிற்று.

ஆங்கிலேயரிடம், அரசியல் நோக்கம் தொடக்கத்தில் இல்லை. வாணிக நோக்கமே இருந்தது. பிரஞ்சுஆதிக்கம் தம் வாணிகத்துக்குக் கேடு செய்யும் என்பதனாலேயே, அவர்கள் பிரஞ்சு ஆட்சியை எதிர்த்தனர். அத்துடன் அக்காரணத்தால், அரசியல் நோக்கத்தை அவர்கள் ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், அதை ஏற்ற பின்பும், அவர்கள் முதல் நோக்கம் அதுவல்ல. ஆட்சி அவர்களுக்கு, வாணிக ஆதிக்கத்துக்கு ஒரு கருவி மட்டுமே. அது கைக்கு வந்த பின், அவர்கள் பிரஞ்சுக்காரரைப் போல, வாணிகத்தைக் கைக் கொள்வதுடனும், புகழ் ஆட்சி செய்வதுடனும் நின்று விடவில்லை.

அவர்கள் ஆட்சியைப் பயன்படுத்தி, தென்னகத்தில் அன்று குவிந்து கிடந்த உலகின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொண்டு, அதன் மூலம் உலக ஆதிக்கமே நாடினர். அது மட்டுமோ? கைத்தொழில் துறையிலும், தொழில்