உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

பொறி ஏந்தி, வீரபாண்டியக் கட்டப்பொம்மன் வீசி எறிந்த புகழ்க் கல்லின் சுவடு அது! உடல் சாய்ந்தாலும், சாயாத ஒரு வீர உள்ளம், இன்றும் அவ்விடத்தில் நின்று வருங்காலம் நோக்கி வீறிட்டு முழக்கமிடுகிறது.

தென் கோடியின் இக் குரலுக்குத் தமிழகத்தின் வடகோடி எதிர்க் குரல் தருகிறது. சித்தூர் அருகே, நரசிங்கராயன்பேட்டைப் புறவெளியிலே, அது கன்னட மொழியிலே குரலெழுப்புகின்றது. அதுவே கன்னடத்தின் போர் வாள், ஹைதர் அலியின் வீர முழக்கம். அது தமிழகத்தின் உள்ளம் தடவி, ஆந்திரம் நோக்கி அடர்ந்தெழுகின்றது. கன்னடம் அதிர, மலையாளம் மலைப்பு எய்த, அது தென்னகத்தைத் தட்டி எழுப்புகிறது.

மன்னன் மரபில் வந்த குடிமன்னன் கட்டப் பொம்மன். ஆனால், அவன் மக்கள் தலைவனானான். வெளியார் ஆதிக்கத்தை வீறுடன் எதிர்த்து நின்று, விடுதலைக் கொடியேற்றினான். இதற்கு மாறாக ஹைதரோ, குடி மரபிலே, பொதுமக்களிடையே பொதுமகனாகத் தோற்றியவன். அவன் வீரனானான். வீரத்தை நாடு அழைக்க, அவன் வீர மன்னனானான்; பேரரசு நாட்டினான். அது மட்டுமோ? அவன் மற்றப் பெரும் பேரரசுகளுடன் மோதிக் கொண்டான். ஆயினும், அவன் தன் பேரரசைக் காப்பதை விட, மாநிலம் காப்பதிலேயே பெரிதும் மனங்கொண்டான்.

ஆள வந்த வெளியார்களை மீள வைக்க, அவன் அரும் பாடுபட்டான். எனினும், ஆளத் தெரியாத கோழை மன்னர் பலர் வெளியார் வலுவால், வாழ எண்ணினர். பேரரசுகளோ, சரிந்து வரும் தம் வலுவைச் சதி, எதிர் சதிகளின் உதவியால் சப்பைக் கட்டுக் கட்ட எண்ணின. இன்னும் சிலர், பல வெளியாரை அண்டிப் பிழைப்பதையே ஆக்கமாகக் கொண்டனர். விடுதலைக்கான உயிர்ப் போராட்டத்தைக் கூட