உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

துனன். அவனால் மிகவும் உதவப் பெற்றவன். ஆயினும், அவன் துணிந்து கடமை துறந்து, பேஷ்வாவுக்குக் கோட்டையைத் திறந்து, ஆதரவு தந்தான். இது ஹைதர் ஆற்றலுக்கும் ஊறு செய்தது. அவன் உள்ளத்தையும் புண்படுத்திற்று. இப் பகைச் செயலுக்குப் பரிசாக, மராட்டியர் மீர் அலி ரஸா கானுக்குக் குர்ரம் குண்டாக் கோட்டையை வழங்கினர்.

ஹைதர் எப்படியாவது பேஷ்வாவுடன் இணங்கிப் போக, முன்னிலும் மும்முரமான முயற்சி செய்தான். இத்தடவை சொல் திறமிக்க அப்பாஜி ராம் என்ற தூதுவனை அனுப்பினான். அப்பாஜி ராம் முயற்சி வெற்றி பெற்றது. முப்பத்தைந்து இலட்சம் வெள்ளி பெற்று படையெடுப்பை நிறுத்தப் பேஷ்வா ஒப்புக் கொண்டான். ஹைதர் உடனடியாகப் பாதிப் பணம் திரட்டிக் கொடுத்தான். மறு பாதிக்குக் கோலார் மாவட்டம் ஈடாக அளிக்கப்பட்டது. இம்மறு பாதியையும் விரைவில் திரட்டிக் கொடுத்து, அவன் கோலாரையும் மீட்டுக் கொண்டான். இவ்வாறு மலை போல வந்த இடர், பனி போல நீங்கிற்று.

மைசூர்ப் படையெடுப்பில், மராட்டியருடன் நிஜாமும் பங்கு கொள்ள எண்ணியிருந்தான். ஆனால், அவன் படைகள் வந்து சேரு முன்பே, நேச ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆயினும், இந்தப் புதிய சூழ்நிலையையும் பயன் படுத்திக் கொள்ள, நிஜாம் எண்ணமிட்டான். ஹைதருடன் சேர்ந்து, ஆர்க்காட்டு நவாப் முகமதலியையும், அவன் கைப்பாவையாக நடந்து கொண்ட ஆங்கிலேயரையும் தாக்க அவன் திட்டமிட்டான்.

ஹைதர் இப்புதிய திட்டத்தை உள்ளூர விரும்பவில்லை. ஆயினும், நிஜாமின் வற்புறுத்தலுக்கு அவன் இணங்கினான். ஆனால், படைகள் ஆர்க்காட்டுச் சமவெளியில் இறங்கும் வரை