பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீஆக்ட் பண்ணச் சொல்றீங்க... அப்படித்தானே?...ஒ. கே!' பார்வதியின் பொன்ஞர்மேனி ஏன் அப்படி நடுங்கு கிறது? - பரத நாட்டியத்தை ரசிப்பவனை கட்டாயத்தின் பேரில் டிஸ்கோ நடனத்தை ரசிக்கச் செய்தால், அவன் அழுது வடிய மாட் டாளு?-அதே கதையாகவும் காரண மாகவும், வினாடிகள் சில அப்போதைக்கு அழுது வடி கின்றன. "நான் ரெடி!' என்று கூறியவாறு வந்து நின்றாள் பார்வதி. 'நானும் ரெடிதான்!” என்றான் செந்தில். மாப்பிள்ளை முறுக்கோடு தோன்றினன், மாப்பிள்ளை யென்றால், சாமான்யமான மாப்பிள்ளையா?-சிரஞ்சீவி மாப்பிள்ளை ! தலையை நிமிர்த்தி, விழிகளை உயர்த்தி எதிரே நின்ற வளை எதிர்கொண்டு நோக்கினன்; அவன் மெய்சிவிர்த் தான்; மெய்ம்மறந்தான். 'காஞ்சிப்பட்டிலே காஞ்சி காமாட்சி மாதிரியே தரிசனம் தாராங்களே பார்வதி?... கையெடுத்துக் கும்பிட்டா என்னவாம்?' - கூப்பாட்டுச் சத்தம் எதிரொலிக்கவே, தன் நினைவு பெற்றுத் திரும்பு கிறான், திரும்பத் திரும்ப அம்மா! ... அப்பா!' என்று கூப்பாடு போட்டாள் பார்வதி. ஊஹூம்! ... பெற்றோர்களின் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து புரண்டு கதறினுள் பார்வதி: "நீங்க ரெண்டுபேரும் ஆள் மாற்றி ஆள் நொடிக்கு நூறுவாட்டி நோய்நொடியிலே படுத்துக்கிட்டு என்னைச் சோதிக்கலையா? நான் ஒருவாட்டி உங்களைச் சோதிச்சதுக்காக இத்தனை தொலைவுக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்னுகூடி அழுச்சாட்டியம் செஞ்சா, அது தெய்வத்துக்கு அடுக்குங்களா? அப்பா...அப்பா!...

遭瓷罗

127