பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஸார், உங்களுக்குக் காலத்திலே கண்; எனக்குக் கடமையிலே கண் 1-மறுபடியும் சொல்றேன்: இந்த அருமைத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பிரமாதமாகத் தொண்டு செய்கிறதாகத் தம்பட்டம் அடிச்சுக்கிட்டு: சமூகத்தோட நல்லாரோக்கியத்தையும் உயர்பண்பாட்டை i:ம் திரைமறைவிலே அண்டிக்கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கிட்டு வருற சமூகக்குற்றவாளிங்களிலே “சமூகத் துரோகிங் களிலே ஒருத்தியான இந்திரா நகர் மாதங்கி என்கிற போலித்தனமான பொய் வேஷதாரியான சமூக வேசியை என்னவெல்லாமோ நாடகம் ஆடி இந்தத் தமிழ் மண்ணின் பிரகாசமான எதிர்கால வளர்ச்சியையும் வாழ்வையும் முன்னேற்றத்தையும் உத்தேசிச்சுத் தமிழ்ச், சமூகப் பண்பாட்டின் பேராலேயே குத்திக் கொன்றவனும் நானேதான்!. ...செந்தில்நாதன் வாக்குமூலம் கொடுத் தான. பார்வதி கூக்குரல் எழுப்புகின்றாள்: "ஐயையோ!...நடந்த நாடகம் போதாதா?...அட வாழுந் தெய்வமே!’’ - சட்டம் கண் சிமிட்டுகிறது. கண் அமர்த்துகிறான் செந்தில். 'என் மாதிரி நீங்களும் உண்மையான ஒரு மனிதரானால், இன்னம் ஒரு பத்து நிமிஷம் எனக்காகக் காத்திருங்க. கொஞ்சம் முந்தி நான் தாலி பூட்டி, எனக்கு அருமையான மனைவியாக ஆன பாக்கியவதி இவள், பேர், பார்வதி! தமிழ்ப் பார்வதி இவள்; தமிழச்சி பார்வதி இவள்!-அங்கே பார்த்திங்க தானே? சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்திலே நோய்க்குப் பலியான அவங்க ரெண்டு பேரும்தான் என்னோட பார்வதியைப் பெற்றவங்க!... --செந்திலுக்கு விவேகம் கூடுதல். கூடுதலான அக்கறையோடு பார்வதியின் திசைக் குத் திசை திரும்பினான் அவன்,

基多{}

140