பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 , கன்னித் தொழுவம் 8 து. - பூவை எஸ். ஆறுமுகம ராத்திக சாப்பாடு முடிந்ததும், கைக்கு மெய்யாகத் தாம்பூலம் தரித்து, துளி அளவுக்குப் பன்னீர்ப் புகையிலை யைக் கடைவாயில் சுவாரசியமாக அடக்கிக் கொண்டு ஆனந்தப் பட்டால்தான், சிவகாமிக்கு உறக்கம் பிடிக்கும், வழக்கம்போல் தாம்பூல சம்பிரதாயத்தைச் சட்டமாக முடித்துக் கொண்ட ஆறுதலோடு தலையணையை இழுத்துப் போட்டுத் தரையிலே ஊன்றிச் சாய்த்திருந்த கைகளில் தலை சாய்ந்து கிடந்தவள். அசந்து மறந்த நிலையில், பன்னீர்ப் புகையிலையின் எச்சி ைமிடறு விழுங்கவே, காட்டுத் தனமாக இருமல் வெடித்தது: கண்கள் சிவந்து வழிந்தன; முகமெல்லாம் மாறியது; மூச்சுப் பேச்சு இல்லை. பார்வதி பதறினுள். ஆத்மநாதன் வெளியே காற்ருட நின்றவர், உள்ளே ஒடி வந்து சின்னப்பிள்ளை மாதிரி விம்மி விம்மி அழுதார். உயிருக்கு இனியவளின் அலுத்துச் சலித்த மார்பை விரல் கள் நடுங்கத் தடவிவிட்டார், மார்பகத்தில் சாட்சி. சொல்லி வடுபாய்த்திருந்த தாலித் தழும்பில் அலங்கோல மாகக் கிடந்த மங்கலத் தாலியைப் பார்த்ததுதான் தாமதம்: 'சிவகாமி!” என்று ஓங்கிப் புலம்பினர். பார்வதியும் அழுதாள்.

இச

66