பக்கம்:கன்னித் தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 13?

நல்ல குணங்கள் இல்லாமல் இருந்தால் பிள்ளை களுக்கு அவரிடத்தில் வேலை இல்லை. வெறும் படிப்பை மாத்திரம் கற்றுக் கொள்வது என்பது பழைய தமிழ் நாட்டில் இல்லை. நடை, உடை, பாவனை எல்லா வற்றிலும் நல்லவைகளைப் பிள்ளைகள் ஆசிரியரிடத்தில் கற்றுக் கொள்வார்கள். தாம் கற்ற கல்வியை ரூபா, அணு, பைசாவாக மாற்றுவது அக்காலத்தவர்கள் நோக்கம் அல்ல. கல்வியை வாழ்க்கையாக மாற்று வார் க ள். கற்றவற்றைச் சோதனையிடுவதையே வாழ்க்கையாக எண்ணுவார்கள். வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வியைச் சிறந்த குணங்களைப் பெற்ற ஆசிரியர்களிடம் கற்கவேண்டுமே யொழியச் சாதாரண மனிதர்களிடம் கற்பதில் சிறப்பு ஒன்றும் இல்லை.

சிறந்த குணங்கள் இல்லாவிட்டாலும், குற்ற மில்லை யென்று வாத்தியார் ஐயா ஒருவரிடம் குழந்தை களை ஒப்பிக்கிருேம். ‘லட்சிய வாழ்க்கைக்குரிய வழியை அவர் கற்றுத் தர வேண்டாம்; சாமான்ய வாழ்க்கைக் குப் போதியவற்றைக் கற்பித்தால் போதும் என்று எண்ணுகிருேம். அந்த வாத்தியார் கெட்ட குணம் உடையவராக இருந்தால் பையனுக்கு முதலில் அது தானே படியும்? இளம் பருவத்தில் நல்லது ஏரு விட்டாலும்,கெட்ட பழக்கங்கள் மிக விரைவாக ஏறி விடும். ஆகையால், வாத்தியார் ஐயா ஒரு மகாத்மா வாக இல்லாமற் போனலும் குற்றம் இல்லை; போக்கிரி, யாக இருக்கக்கூடாது’ என்று நாம் நினைக்கிருேம். அதையே இலக்கணக்காரர்களும் சொல்கிறார்கள்.

வாத்தியார் மற்றவர்களுடைய நலத்தைக் கண்டு பொருமை கொள்ளும் பேர்வழியாக இருக்கக்கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/145&oldid=612798" இலிருந்து மீள்விக்கப்பட்டது