பக்கம்:கன்னித் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

கன்னித் தமிழ்

இதற்கும் ஒற்றைக்கல் மன்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையுணர்ந்தோருக்குத் .ெ த ரி யு ம். இது மாதிரித் தான் இருக்கிறது தமிழென்னும் பெயராராய்ச்சியும்.

“ அப்படியானல் தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னர் கள்?’ என்று கேட்கலாம். மாற்ற வேண்டிய அவசியம் வந்து விட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதல்ை மாற்றிக்கொண்டார்கள்.

பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் .ெ சா ல் லை ப் பழைய தமிழர்கள் எ ங் கேனும் சொல்லியிருக்க வேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை; தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது கேலிக் கூத்து.

தமிழ் என்ற பெயர் முதல் முதலில் தமிழ் நாட் டுக்கு வழங்கி யிருக்க வேண்டு மென்று தோன்று கிறது. பிறகு அங்கே வழங்கும் மொழிக்கும் ஆயிற்று. முதலில் நாட்டுக்குப் பெயர் வைத்து அதைக்கொண்டு மொழிக்கும் பெயர் வைக்கும் மரபை மற்ற நாடுகளில் காண்கிருேம். மூன்று லிங்கங்களைத் தன்பாற் கொண்டமையால் ஆந்திர தேசத்தைக் திரிலிங்க மென்றார்கள். அது பிறகு தெலுங்கம் ஆயிற்று. அதிலிருந்து அந்நாட்டில் வழங்கும் மொழிக்குத் தெலுங்கு என்ற பெயர் வந்தது. தமிழ் என்ற சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/18&oldid=1285972" இலிருந்து மீள்விக்கப்பட்டது