பக்கம்:கன்னித் தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளே i?3。

பெருமகள் ஆய்க்குடி வாழ்ந்து

பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமக ளேக்கண் டுகந்து

மணுட்டுப் புறஞ்செய் புங்கொலோ!

அவளுடைய துக்கத்தைச் சொல்லும் இந்தப் பாட்டின் பல்லவிபோல நிற்பது, “ஒரு மகள் தன்னை உடையேன்” என்ற தொடர்தான்.

2

பெண்ணைப்பற்றிச் சொல்லும் தாய்மார்களின் பரிவை மேலே சொன்ன பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆண் பிள்ளையை உயர்வாகக் கருதினர் பழங்கால மக்கள். ஆதலின் ஒரு தாய்க்கு ஓர் ஆண்பிள்ளை யானுல் அவனிடம் தாய்க்கு எத்தனை அன்பும் பிடிப் பும் இருக்கும் இலக்கியங்களில் இந்த அன்பைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் இடங்களும் உண்டு.

பழங்காலத்து வீரக்குடி ஒன்று. போர் என்று சொன்னல் அடுப்பங்கரையில் ஒளிக்கும் கோழைகள் அல்ல, அந்த வீட்டு ஆடவர்கள். பரம்பரை பரம்பரை யாக அந்த இல்லிலே பிறந்தவர்கள் யாவருமே போரில் தம் வீரத்தைக் காட்டினவர்கள். ஒருவராவது நோய். வந்து செத்தார் என்பது இல்லை. எல்லோருமே போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் புகழை வாங் கிக்கொண்டவர்கள். இது பழந்தலைமுறைக் கதை.

இந்தத் தலைமுறை எப்படி? இந்த வீட்டில் இப் போது ஒரு பெண் இருக்கிருள். அவளுக்கு ஒரு சின்னக் குழந்தை இருக்கிருன். ஆண் என்று சொல்வதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/181&oldid=612920" இலிருந்து மீள்விக்கப்பட்டது