பக்கம்:கன்னித் தமிழ்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

கன்னித் தமிழ்


துறைகெழு கொண்க! நீ நல்கின் நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.

('விளையாடுகின்ற பெண்களின் கூ ட் ட த் தோ டு வெள்ளேயான மணலில் அழுத்தி மறந்து விட்டுச் சென்ற கொட்டையானது, முளேவிட்டுத் தளிர்க்க, கெய்யோடு இனிய பாலேப் பெய்து இனிமையாக நாங்கள் வளர்த்துவர, உம்மைவிடச் சிறந்ததாயிற்று; அதனுல் உங்கள் தமக்கை ஆகும்’ என்று இந்தப் புன்னேயின் சிறப்பை அன்னே கூறினள். ஆதலால் உம்மோடு இங்கே மகிழ்ந்திருப்பதற்கு நாணுகின்றாேம். புதுமையான பாணர்கள் பாடும் விளரிப் பண்ணேப்போல வெள்ளிய வலம்புரிச் சங்கு முழங்குவதும், விளங்கும் நீரை உடையதுமாகிய கடல் துறையையுடைய தலைவனே ! நீ கின் காதலிக்கு மகிழ்ச்சியை வழங்குவ தானல், அதற்கு ஏற்றபடி நிறைந்திருக்கின்ற மரநிழல் பிறவும் இருக்கின்றன.

ஆயம் - மகளிர் கூட்டம். காழ் - கொட்டை. அகையதழைக்க. துவ்வை.தும் தவ்வை, உங்கள் அக்காள். காணுதும் - நாணம் அடைகிருேம். ஈகை - ம கி ழ் ச் சி. விருந்து - புதுமை. கடுப்ப - ஒப்ப, வான்கோடு - வெள்ளேச் சங்கு. நரலும் - முழங்கும். கொண்க - தலைவ. கல்கின் - வழங்கில்ை. பிறவுமார்: மார், அசை கிலே.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/208&oldid=1286056" இலிருந்து மீள்விக்கப்பட்டது