பக்கம்:கன்னித் தமிழ்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

கன்னித் தமிழ்


களைக் கூறுகிறார். கம்பரும் உவமை கூறுவதில் சளைத்தவர் அல்லர்; சில சில உவமைகளைச் சிந்தாமணியினின்றும் எடுத்துச் சிறிது மாற்றியும்

கூட்டியும் போற்றி வைக்கிறார்.

மழைத் தாரைக்கு வெள்ளி வெண் கோலைத் தேவர் உவமை கூறினர். கம்பர் வெள்ளி விழுதைக் கூறினர்.

  • * * 翰 # * வெள்ளிவெண் கோல்நி ரைத்தன போற்கொழுந் தாரைகள் வான்தி ரைத்து மணந்து சொரிந்தவே.

(சிந்தாமணி, 33) (கிரைத்தனபோல் - வரிசையாக வைத்தவற்றைப் போல. கிரைத்து - வரிசையாக கின்று.)

வெள்ளி விழிடை வீழ்த்தெனத் தாரைகள் * - to வழங்கின மேகமே, - (கம்பராமாயணம்) (வீழ் - விழுது. வீழ்த்தென - விழச் செய்ததுபோல. தாரைகள் - மழ்ைத்தாரைகளே.)

இராசமாபுரத்தின் வீதிகளில் பல நாட்டு மக்களும் வந்து குழுமுகிறார்கள். பதினெட்டு மொழிகளைப் பேசுகிறவர்களும் கூடித் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பேச்சின் ஒலிக்குத் திருத்தக்க தேவர் ஓர் உவமை கூறுகிறார் ஆல மரத்தில் பட்சிக் கூட்டங்கள் சேர்ந்து பல பல வித மான ஓசையை எழுப்புமே, அப்படி இருந்ததாம்: - இட்டஎள் நிலப்படா வகையின் ஈண்டிய

முட்டிலா மூவறு பாடை மாக்களால் புட்பயில் பழுமரப் பொலிவிற் முகிய மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/230&oldid=1286066" இலிருந்து மீள்விக்கப்பட்டது