பக்கம்:கன்னித் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கன்னித் தமிழ்


அவற்றை யெல்லாம் பிற்காலத்தில் கடல் விழுங்கி விட்டது. பூகம்பம் ஒன்று நேர்ந்து அவை மறைந்தன.

முன் இருந்த நிலப் பரப்பில் மிகத் தெற்கே மதுரை என்ற நகரம் இருந்தது. இப்போதுள்ள மதுரை வடக்கே இருப்பதால் இதற்கு வட மதுரை என்ற பெயர் வழங்கியது. தமிழ் நாட்டில் இரண்டு மதுரைகள் இருந்தமையின் ஒன்று தென் மதுரை யெனவும், மற்றாென்று உத்தர மதுரை யெனவும் வழங்கின.

பழைய மதுரையில் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வந்தான். அகத்தியர் பொதியிற் சங்கத்தை வளர்த்து வந்த காலத்தில் அந்த மதுரைதான் பாண்டி நாட்டுத் தலை நகராக விளங்கியது

அடிக்கடி அகத்திய முனிவருடைய தரிசனத்தைப் பெற்றுப் பொதியிற் சங்கத்தில் ஒரு புலவனுக இருந்து தமிழ் இன்பம் நுகர்ந்த பாண்டியன், தன் நகரத்தில் சங்கம் வைக்கவேண்டு மென்று விரும் பிஞன். புலவர்கள் யாவரும் சேர்ந்து வாழ்வதற்கு உரிய இடம் தலை நகராதலின், அங்கே தமிழ்ச் சங்கம் வைத்து நடத்துவது எளிதாக இருக்கும் என்று அவன் கருதினன். இராசதானி நகரத்துக்குத் தமிழ்ச் சங்கம் பெருஞ் சிறப்பை உண்டாக்கு மென்பதும் அவன் எண்ணம். -

அகத்தியர் அவன் விருப்பத்தைத் தெரிந்து மகிழ்ந்தார். வர வரப் பெருகிக் கொண்டிருக்கும் புலவர் கூட்டத்தை அரசனுல் பாதுகாக்க முடியுமே யன்றி, ஆசிரம வாசியாகிய முனிவரால் முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/34&oldid=1285980" இலிருந்து மீள்விக்கப்பட்டது