பக்கம்:கன்னித் தமிழ்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ் மிக மிகப் பழமையானது. எத்தனையோ பழங் தமிழ் நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் நூல்களைக் கொண்டு தமிழின் பழமையை ஒரு வாறு உணர முடிகிறது. வரையறையாகக் காலத்தைத் தெரிந்து சொல்ல உறுதியான ஆதாரங்கள் தெளிவாக இல்லை. அதல்ை பழைய தமிழ் நூல்களின் காலம் இன்னதுதான் என்று திட்டமாகச் சொல்ல முடியவில்லே. கிடைக்கும் பழைய நூல்களுள் தொல்காப்பியம் மிகப் பழையதென்று பலரும் கருதுகிறார்கள். அது தோற்றிய காலம் இன்னதென்று நிறுவும் வகை தெரியாமல் ஆராய்ச்சிக்காரர்கள் திண்டாடுகிறார்கள். குத்து மதிப் பாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று சிலர் கூறுகிறார்கள் இன்னும் சிலர் சில சொற்களே வைத்துக்கொண்டு தொல் காப்பியர் அவ்வளவு பழமையானவரல்ல என்று சொல் கிறார்கள். தொல்காப்பியத்தின் பண்ணமைந்த கட்டுக் கோப்பையும் அதன்பால் உள்ள செய்திகளையும் பார்த்தால் அதற்கு முன் பல நூல்கள் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்று நிச்சயமாகக் கூறலாம். பல நூல்கள்-இலக்கியங் களும் இலக்கணங்களும்-வெளிவந்த பிறகே அத்தகைய அமைப்பையுடைய இலக்கணம் பிறக்க முடியும் அகத்தி யம், மாபுராணம், பூத புராணம் முதலிய நூல்கள் இருந் தனவாகத் தெரிகின்றன. ஆல்ை அவற்றின் தன்மையைத் தெளிவாக அறிவதற்குரிய ஆதாரங்கள் கிடைக்க வில்லை. ... . - . - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/4&oldid=613239" இலிருந்து மீள்விக்கப்பட்டது