பக்கம்:கன்னித் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

கன்னித் தமிழ்


மன்னருக்கு உரியது’ என்று சொல்லுகிருன். தாமிர வர்ணியின் சங்கமத் துறைக்கு அருகே கபாடபுரம் இருந்த தென்று இதனுல் தெரிய வருகிறது. அந்த நகரம் சுவர்ணமயமாக இருந்ததென்று சுக்கிரீவன் சொல்வதாக வால்மீகி குறிப்பிடுகிறார். அந் நகரத்தின் செல்வ மிகுதியைக் குறிப்பது அது. இராசதானி நகர மாதலின் அழகு மிகப் பெற்றிருப்பது இயல்பே. முத்தும் மணியும் நிரம்பியிருப்பது என்பது அத்துறை யில் முத்துக் குளித்துத் தொகுத்தனர் என்பதைக் குறிக்கும்.

கெளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கபாட புரத்து முத்தை ஓரிடத்திலே குறிப்பிடுகிறார், முத்தின் வகைகளைச் சொல்லும்போது பாண்ட்ய கவாடகம் என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறார். பாண்டியருக்குரிய கபாட புரத்திலே எடுப்பது என்ற செய்தியை அப் பெயர் தெரிவிக்கிறது.

பாரதத்திலும் கபாடபுரத்தைப் பற்றிய பிரஸ்

தாபம் வருகிறது. துரோன பர்வத்தில் ஒரிடத்தில்,

பாண்டியன் இறந்தனன். அவனது நகரமாகிய கபாட புரமும் அழிந்தது என்று கூறப்படுகிறது.

இவற்றால் கபாடபுரத்தில் பாண்டியர்கள் இருந்து அரசு புரிந்து வந்த செய்தி தெரியவரும். தமிழ்ச் சங்கங்களைப்பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முதல் ஆதாரமாக இருப்பது இறையனரகப்பொருள் என்ற இலக்கணத்தின் உரை. அதில் மூன்று சங்கங்களைப் பற்றிய விவரங்களும் வருகின்றன. இடைச் சங்க மாகிய இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் இருந்த

தென்று அவ்வுரை சொல்லுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/40&oldid=1285982" இலிருந்து மீள்விக்கப்பட்டது