பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அம்மாவைத் திருவண்ணுமலைக் கோவிலின் உள்ளே அழைத்துச் செல்ல முயற்சி செய்தார் திரு. இராஜ மாணிக்கம் ஆணுல் அம்மாவிற்குக் கோவிலினுள் செல் வதற்கு விருப்பம் இல்லை. பாதியிலேயே கட்டாயமாகத் திரும்பி விட்டாராம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் திகம்பரச் சன்யாசிகள் வந்திருந்தனர். அவர்கள் ஜைன சமயத்தைச் சார்ந்தவர்கள். ஏற்கனவே அம்மாவைப் பற்றி அவர்கள் கேள்விப் பட்டிருந்தனர். உதவியாளர்களின் துணையோடு அம்மா இருந்த கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர். அம்மா எது வும் பேசவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தனர். வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் சுற்றிலும் நின்று கொண்டிருந்தது. திகம்பார்களின் பார்வை அம்மாவின் ஆன்மாவைப் புரிந்து கொண்டது போல் இருந்தது. அவருக்குத் தான் ஜாதி மதம் மொழி எதுவுமே கிடை யாதே. அவற்றில் பற்றுக் கொண்ட நிலைக்கெல்லாம் எத்தனையோ மைல் தாண்டியவராயிற்றே. அன்று இரவு அந்தச் சமணத் துறவிகள் கன்னியா குமரியிலேயே தங்கி இருந்தனர். மறுநாள் காலையில் அம்மா இருந்த குடிலுக்கு அவர் கள் வந்தார்கள். குடில் திறக்கவில்லை. அவர்கள் காத் திருந்தார்கள். குடிலினுள் ராஜேந்திரனும் அம்மாவும் நாய்களும் மட்டும் தரன் இருந்தனர். திகம்பரர் வெளியே காத்திருப்பதை உணர்ந்த இராஜேந்திரன் குடிலின் கதவைத் திறக்க முயற்சி செய்தார். அம்மா எழுந்து வந்து தடுத்தாராம் : இராஜேந்திர னைக் கதவைத் திறக்க விடவில்லை.