பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

17


எந்த ஒரு தகாத வழியிலும் செல்வத்தைச் சேர்க்க முயலாதீர்கள். நியாயமற்ற, நேர்மையற்ற வழியில் சேரும் பணமும், புகழும் வானத்தில் ஓடும் மேகங்களைப் போன்றவை என்பதை உணர்ந்து நடப்பது நல்லது!

நேர்மையான, மனசாட்சியான மனிதனைப் பார்க்கும்போது, அவன் ஒழுக்கத்தை நீங்களும் பெறுங்கள்; வாழ முயலுங்கள்; தீயவனை காணும்போது உங்களுடைய தவறுகளை நீங்களும் அகற்றி விடுங்கள்.

எதைச் செய்தாலும் கவனத்தோடு செய்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் தவறுகள் செய்யவே மாட்டார்கள். ஒரு மனிதன் என்ன தவறு செய்கிறான் என்பதில் இருந்தே இவன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அதுபோலவே நாம் தவறு செய்துவிட்டோமே என்று அச்சமோ வெட்கமோபடாதீர்கள். இவ்வாறு செய்வீர்களேயானால், நீங்கள் மீண்டும் தவறு செய்வீர்கள்!

உங்களுடைய ஆற்றலால் விளையும் திறமைகளை பிறர் உணரவில்லையே என்று மனவருத்தப் படாதீர்கள். அதே பிறர், உங்களுடைய திறமைகளையும் ஆற்றலையும் உணரும் அளவிற்கு தொடர்ந்து செயலில் நடந்து காட்டுங்கள்!

மற்றவர்களால் வெறுக்கப்படும் மக்களை விரும்புபவன்; மற்றவர்களால் விரும்பப்படுபவர்களை வெறுப்பவன் இருக்கிறானே அவன், மனிதர்களின் இதயங்களைப் புண்படுத்துபவன் ஆவான்; ஆனால் அதே அவன் அனுபவிக்கப் போகும் துன்பத்தை நாம் அளவிட்டுச் சொல்லி முடியாது.

நேர்மையான மனிதன் தான் செய்வதைவிட பல விஷயங்களைப் பற்றி மிதமான அளவில் பேசுபவனே