பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கபோதிபுரக்


“என்னடா பரந்தாமா ரொம்ப குஷியாக இருக்கிறாய். சம்பாத்தியம் ரொம்ப ஜாஸ்தியா?” என்று மற்ற வண்டிக்காரர்கள் பரந்தாமனைக் கேட்டனர்.

“நான் அழகாபுரிக்குப் போகப்போகிறேன். அங்கே ஒரு கலியாணம். டேய், யாரும் சிரிக்கக்கூடாது. எங்க தாத்தவுக்குக் கலியாணம். கார்டு வந்தது வரச்சொல்லி” என்றான் பரந்தாமன்.

“பலே! பேஷ்! சரியான பேச்சு பேசினானப்பா பரந்தாமன், தாத்தாவுக்குக் கலியாணமாம், பேரன் போகிறானாம்!” என்று சொல்லிச் சிரித்து கேலி செய்தார்கள்.

பரந்தாமனும், கூடவே சிரித்தான். அவனுக்கு உள்ளபடி மாரியப்பபிள்ளைக்கு அறுபதாம் கலியாணம் நடக்கவேண்டி இருக்க, நிஜமான கலியாணமே செய்துகொள்ளப் போவதாகவும், அதற்கு வரும்படியும், காரியஸ்தன் கருப்பையா கார்டு போட்டதைக் கண்டதிலிருந்து சிரிப்புதான்! அழகாபுரியிலேதானே அந்தச் ராதா இருக்கிறாள்; கலியாண சாக்கிலே. அவளைக் காணலாமே என்று எண்ணித்தான், தன் தாத்தா கலியாணத்துக்குப் போக முடிவு செய்தான்.

விஷயத்தைச் சொன்னாலே, எல்லோரும் சிரிக்கிறார்கள். எவ்வளவோ சொன்னான். விழுந்துவிழுந்து சிரித்தார்களே தவிர, ஒருவர்கூட நம்பவில்லை.

கடைசியில், மடியில் வைத்திருந்த கார்டை எடுத்து வேறு ஆளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பிறகுதான், பரந்தாமன் சொல்வது உண்மை எனத் தெரிந்தது. உடனே சிரிப்பு போய்விட்டது. ஒவ்வொருவரும், கண்டபடி பேசலாயினர். ‘என்னா கிறாக்குடா கிழவனுக்கு? கல்லு புள்ளையார் போல பேரன் இருக்கச்சே மூணாம் தாரம் செய்கிறானாமே” என்று ஒருவனும், “இதாண்டாப்பா கலிகாலம்” என்று மற்றொருவனும், “சே!