பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

25


தயாராக நின்றுகொண்டிருந்த மாரியப்பபிள்ளையை மெதுவாகத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

மாரியப்பபிள்ளை போன உடனே வேதத்தின் புருஷர், பரந்தாமனை நையப் புடைத்து, “பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே!” என்று அழுதார்.

“புறப்படடி! போக்கிரிச் சிரிக்கி, போதும் உன்னாலே எனக்கு வந்த பவிசு” என்று சாரதாவைக் கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து மூவருமாகத் தமது வீடு போய்ச் சேர்ந்தனர்.

பரந்தாமன், இன்னது செய்வதென்று தோன்றாது ஊர்க்கோடியில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் புகுந்துகொண்டான் அன்றிரவு. ஊரில் லேசாக வதந்தி பரவிற்று. சாரதா வீட்டாருக்கும் அவள் கணவனுக்கும் பெருத்த தகராறாம். சாரதாவைக் கணவன் வீட்டைவிட்டு துரத்திவிட்டார்களாம்” என்று பேசிக்கொண்டனர்.

வீடு சென்ற சாரதா, நடந்த காட்சிகளால் நாடி தளர்ந்து சோர்ந்து படுத்துவிட்டாள். ஜூரம் அதிகரித்துவிட்டது. மருந்து கிடையாது. பக்கத்தில் உதவிக்கு யாரும் கிடையாது. அவள் பக்கம் போனால் உன் பற்கள் உதிர்ந்துவிடும் இடுப்பு நொறுங்கிவிடும் என்று வேதத்துக்கு அவள் கணவன் உத்திரவு.

எனவே தாலிகட்டிய புருஷன் தோட்டத்தில் தவிக்க, காதலித்த கட்டழகன் மண்டை உடைபட்டு, பாழ்மண்டபத்தில் பதுங்கிக் கிடக்க, பாவை சாரதா படுக்கையில் ஸமரணையற்றுக் கிடந்தாள்.

இரவு 12 மணிக்குமேல், மெல்ல மெல்ல, நாலைந்து பேர், பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். அவர்களின் நடை உடை பாவனைகள் பரந்தாமனுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே