பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

49


வேண்டி வந்ததல்லவா – என்று எண்ணியதும் சாரதாவின் கண்கள் தானாகக் கலங்கின.

மெல்ல நடந்து கருப்பையாவை அணுகினாள். அவன் அங்கு மரமென நின்றான். “சொல்லு கருப்பையா என் மீது ஏன் உனக்குக் கோபம். நான் என்ன செய்தேன்” என்று வீட்டு எஜமானி சாரதா காரியஸ்தன் கருப்பையாவைக் கேட்டாள் – காதலால் கட்டுப்பட்டு அல்ல, அவனிடம் கண்மூடித்தனத்தால் கட்டுண்ட காரணத்தால்.

“எனக்கென்னம்மா உங்கள் மீது கோபம். நீங்கள் வீட்டு எஜமானியம்மா நான் கணக்கு எழுதிக் காலந்தள்ளுபவன்” என்று எரிகிற நெருப்பை ஏறத் தள்ளினான் கருப்பையா.

“இதோ, இப்படிப்பார். விஷயத்தைச் சொல்லு, வீணாக என் மனத்தைப் புண்ணாக்காதே” என்றாள் சாரதா, கருப்பையாவின் தோளைப்பிடித்து இழுத்துக்கொண்டே.

கோடியில் இருந்த சிங்காரவேலன், பதுங்கியபடி சற்று அருகிலிருந்த மரத்தின் பின்புறம் நின்றுகொண்டு, கோடாக்கைச் சரிப்படுத்திக்கொண்டான்.

“மனம் புண்ணாகுமா! மகராஜி நீ. நான் இங்கு மாதச் சம்பளத்துக்கு இருப்பவன். என் கோபம் உன் மனத்தைப் புண்ணாக்குமா” என்றான் கருப்பையா.

“விஷயத்தைச் சொல்லுகிறாயா நான் விழுவதற்குக் குளம் குட்டை தேடட்டுமா” என்று உறுதியுடன் கேட்டாள் சாரதா.

“ஐயோ! அம்மா! அப்படி ஒன்றும் செய்துவிடாதே சிங்காரவேலருக்கு யார் சமாதானம் கூறுவது” என்று கிண்டல் செய்தான் கருப்பையா.

சாரதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. தனக்கும் சிங்காரவேலுவுக்கும் ஏதோ தொடர்பு ஏற்பட்டதாக

4