இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
112
கப்பலோட்டிய தமிழன்
அவை என்றேனும் ஒரு நாள் அழியக் கூடியனவே. சிதம்பரனாரின் நினைவாக நாம் உருவாக்கும் சின்னம் அழியாத புதிய தமிழகம். ஆம்; குமரி முதல் வேங்கடம் வரையுள்ள புதிய தமிழகம். தமிழர்களே! அந்தப் புதிய தமிழகத்தை உருவாக்கப் பாடுபடுங்கள்; சிதம்பர னாரின் ஆண்மைமிக்க வரலாறு நமக்கு வழிகாட்டும்; அவரது ஆவி நமக்கு ஆசி கூறும்.
வாழ்க தமிழினம் ! வாழ்க தமிழகம்!
வாழ்க வ. உ. சி. நாமம்!