உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கப்பலோட்டிய தமிழன்







நன்றியறிதலையே நல்லொழுக்கமாகக் நல்லொழுக்கமாகக் கொண் ட சிதம்பரனார், முதல் மனைவியாரின்பால் காட்டும் நன் றிக்கறிகுறியாக மீண்டும் அவ்வம்மையாரின் குடும்பத் திலேயே திருமதி. மீனாட்சியம்மை என்ற பெண்ணர சியை மணம் புரிந்து கொண்டார்.

மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு கற்பிப்பதை அவர் அடியோடு வெறுத்தார். சாதிக்கொருநீதிகூறும் சழக்கர்களையும் பிறப்பு காரணமாக ஆதித்தமிழர் களைத் தீண்டாதவரெனக் கூறும் தீயர்களையும் கண்டிக்கப் பிள்ளை சற்றும் தயங்கியதில்லை. "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்", "நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லால் பொருளில்லை என்று முன்னோர் மொழிந்த சொல்லின் பொருளை அவர் முற்றும் உணர்ந்திருந்தார். 'இறைவன் படைப் பிலே அனைவரும் சமம்' என்ற உயரிய கருத்தே அவரது உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. ஆதித் தமிழரொருவரை, தமது இன்னுயிர்த் துணைவராகக் கொண்டு தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தார். அவர் தான் சாமி சகஜானந்தர். பிற்காலத்தில் சிதம்பரனார் சிறையிலிருந்து மீண்டதும் சில காலம் சென்னையில் வசிக்க நேர்ந்தது. அப்போது ஒருநாள் சென்னை ரிப் பன் அச்சு யந்திரசாலையில் சிதம்பரனாரும் சாமி சக ஜானந்தரும் முதன் முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாட நேர்ந்த காலையில், பிள்ளை அவ ரது சாதியை விசாரித்தாராம். "நான் நந்தனார் வகுப் புப் பிள்ளை'யென சகஜானந்தர் பதிலளிக்க, உடனே சிதம்பரனார் சகஜானந்தரின் இருகைகளையும் இறுகப் பிடித்து, "உண்மையைக் கூறியதால் நீர்தான் உண்மை அந்தணர் எனக் கூறி, சகஜானந்தரைத் மதில்லத்திற்குக் கூட்டிச் சென்றார். பின்னர் பல ஆண்டுகள் அவரைத் தமது வீட்டிலேயே வைத் திருந்து உணவளித்துத் தொல்காப்பியம், திருக்குறள்