கப்பலோட்டிய தமிழன்
29
பொருள் தேடும் வழிகள் அனைத்தையும் பறித்தனர். அந்த வகையில் தமிழரின் கப்பல் வாணிபமும் ஆங்கி லேயரின் வசமாயிற்று. நில ஆதிக்கமும், கடல் ஆதிக்கமும் பெற்ற அவ்வாங்கிலேயர், நமது தமிழகத் தின் செல்வத்தை யெல்லாம் சுரண்டிச் செல்வா
ராயினர்.
தமிழ் இனத்துக்குற்ற இந்த கேவல நிலை கண்டு சிதம் பரனாரின் நெஞ்சு பொறுக்கவில்லை. ஆயினும், என் செய்வார்? ஆட்சித் திறனும், சூழ்ச்சி அறிவுங் கொண்டு அனைத்துலகும் ஆணை செலுத்தும் ஆங்கிலே யர் முன்பு அவர் எம்மாத்திரம்! தமிழ் மக்கள் அவ்வ ளவு பேரும் ஒருங்கு சேர்ந்து போராடினாலுங் கூட ஆங்கிலேயர் நம்மிடமிருந்து பறித்த வாணிபத்தைப் பற்றுதல் எளிதோ? இல்லை; இல்லை. ஆகவே, தமிழரது உரிமையைப் பறித்து உடைமையையும் சுரண்டிச் செல்லும் வெள்ளை வணிகரை விரட்டியடிக்க எண்ணியவராய்க் காலத்தை எதிர்பார்த்துக் காத் திருந்தார் சிதம்பரனார்.
இந்நிலையில்தான், இந்திய கண்டத்தில் வங்கப் பிரிவி னைக் கிளர்ச்சி வலுக்கலாயிற்று. ஒன்றுபட்ட ஒரே தேசீய இனமாக இருந்த வங்காளியரை இந்து என் றும், முஸ்லிம் என்றும் பிரித்து அவர்களது தாயகமா கிய வங்க நாட்டையும், இந்து வங்காளம், முஸ்லிம் வங்காளம் என்று இரண்டாகத் துண்டாடினார் வைசி ராய் லார்டு கர்சான். குடிமக்களிடையே ஒற்று மையை உண்டாக்குவதே அரசாங்கத்தின் முதற் பொறுப்பு.ஆனால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத் தியம் இதற்கு நேர்மாறாக மக்களிடையே ஒற்றுமை யைக் குலைத்து வேற்றுமையை உண்டாக்குவதையே தனது வேலையாகக் கொண்டிருந்தது. ஒரு அன்னிய ஆட்சி இதை விட வேறு விதமாக நடந்து கொள்ளு மென்று எதிர்பார்க்க முடியாதல்லவா?