32
கப்பலோட்டிய தமிழன்
னர். மற்றும் பலர், பின்னர் பணம் தருவதாக வாக்கு றுதி தந்தனர். ஆனால், ஒரு சில கோழைகள் மட்டும் சிதம்பரனாரின் முயற்சியைக் கேலிசெய்தனர். ஆங்கி லக்கப்பலுக்கு எதிர்க் கப்பல் விடுவதா? அது ஆகாத காரியமப்பா!" என்று பயமுறுத்தினர். ஆனால், சிதம்ப ரம்பிள்ளை முன் வைத்த காலை பின் வாங்குவதில்லை யென்ற முடிவுடன் பணியாற்றினார்.
டது.
சுதேசிக் கப்பல் கம்பெனி 1882-ம் வருஷத்திய இந் தியக் கம்பெனிகள் சட்டப்படி 1906-ம் ஆண்டு அக் டோபர் மாதம் பதினாறாந் தேதி பதிவு செய்யப்பட் பங்கு ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபா யாக நாற்பதாயிரம் பங்குதாரர்களிடம் பத்து லட்ச ரூபாய் சேர்ப்பதெனத் திட்டமிடப்பட்டது. இந்தி யர் மட்டுமின்றி இலங்கையர் உள்பட ஆசியா கண் டத்தார் எவரும் இக்கம்பெனியில் பங்குதாரர்களாகச் சேரலாமெனவும் விதி இயற்றப்பட்ட து.
.
பாலவனத்தம் ஜமீன்தாரரும் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய திரு.ரெ.பாண்டித்துரைசாமித் தேவரை கம்பெனியின் தலைவராக்கி,செயலாள பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டார்சிதம்பரம் பிள்ளை. பதின் மூன்று பாங்கர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியின் ஆரம்பகால டைரக்டர்களாக இருக்க இசைந்தனர். சேலம் சி. விஜயராகவாச்சாரியார், எம். கிருஷ்ணன் நாயர் உள்பட நான்கு வழக் கறிஞர்கள் கம்பெனியின் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.
கம்பெனி பதிவு செய்யப்பட்டதும் பங்குதாரர்கள் சேர்க்கும் வேலை ஆரம்பமாயிற்று. ஜனாப்ஹாஜி முகம்மது பக்கீர் சேட் என்பவர் மட்டும் எட்டாயிரம் பங்குகளுக்குரிய ரூபாய் இரண்டு லட்சத்தை கம் பெனிக்குச் செலுத்தினார். இந்த இரண்டு லட்சம் தான் கம்பெனியின் ஆரம்ப மூலதனமாக அமைந்தது.