34
கப்பலோட்டிய தமிழன்
தன்று. ஆசியாக் கண்டத்தார் அனைவரும் ஒன்று பட்டு முன்னேற உழைப்பதேயாம். இந்தத் திட்டங்களை நிறைவேற்ற தொழில் துறையில் முன் னேறிவரும் நாடான ஜப்பானின் உதவியைப் பெறுவ தெனக் கம்பெனியார் எண்ணினர்.
துவக்கத்தில் சுதேசிக் கப்பல் கம்பெனியார் சொந் தத்தில் கப்பல்கள் வாங்கவில்லை. ஷாலைன் ஸ்டீமர்ஸ் கம் பெனியிடம் குத்தகைக்குக் கப்பல்களை வாங்கி ஓட்டி னர். சுதேசிகப்பல் கம்பெனி தோன்றியதை பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியார் விரும்பவில்லை. அ ந்தக் கம் பெனியைக் கலைப்பதற்கான முயற்சிலும் ஈடுபட்ட னர். பம்பாய் ஷாலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியின் சொந்த காரர் எஸ்ஸாஜி டாஜ்பாய் என்பவர். பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியாரும் தூத்துக்குடி வெள்ளை அதி காரிகளும் மிரட்டியதன் பேரில் சுதேசிக் கப்பல் கம் பெனியாரிடம் தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தி லிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார் டாஜ்பாய். இதனால் சுதேசிக் கம்பெனியார் கப்பல் இன்றிக் கலங்கினர். இவர்களை நம்பி வெள்ளையர் கம் பெனியை விரோதித்துக் கொண்ட தமிழ்வணிகர்கள் செய்வதறியாது திகைத்தனர். இவ்வளவு சங்க டங்களுக்கு இடையிலும் சிதம்பரனார் சிறிதும் கலங்க வில்லை. கொழும்புக்கு விரைந்தோடிச் சென்று பெரிய கப்பல் ஒன்றை குத்தகைக்குப் பேசி தூத்துக் குடித் துறைமுகம் கொண்டு வந்தார். சிதம்பரனாரின் சீரிய செயலைக் கண்டு தூத்துக்குடி வணிகர்கள் சிந் தை குளிர்ந்தனர்.
சொந்தமாகக் கப்பல்கள் வாங்கினாலொழிய, சுதேசிக் கம்பெனி நெடுநாட்களுக்கு நீடிக்க முடியாதென் பதை சிதம்பரனார் உணர்ந்தார். ஆகவே, புதிய கப் பல்கள் வாங்கப் பணம் திரட்டும் பணியில் ஈடுபட் டார். தூத்துக்குடி வணிகர்கள் தங்களாலானவரை