கப்பலோட்டிய தமிழன்
37
அத்தனை அளவற்ற ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாரத தேவியும் இவ்விரண்டு கப்பல் களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண் ணமே எனக் குறிப்பிட்டார்.
சுதேசிக் கப்பல் கம்பெனி நாளுக்குநாள் வலுப் பெற்று வளர்ந்து வந்தது. சுதேசிக் கப்பலிலேயே பொருள்களை ஏற்றுவதென மக்கள் விரதங்கொண்டு அதை நடைமுறையிலும் நிறைவேற்றலாயினர். முத லில் ஒரு சில வணிகர்கள் வெள்ளையர்களின் ஆசை மொழியில் சிக்கி, கட்டுப் பாட்டை மீறி அன்னியர் கம்பெனியை ஆதரித்தனர். எனினும், சிதம்பரனாரின் வேண்டுகோளுக் கிணங்கி அவர்களும் நல்வழிப்பட்ட னர். வணிகர்கள் மட்டு மின்றி, பிரயாணிகளும் பர தேசிக் கப்பல் கம்பெனியைப் பகிஷ்கரித்து சுதேசிக் கப்பலில் பிரயாணஞ் செய்தனர்.
சுதேசிக் கப்பல் கம்பெனியின் செல்வாக்கு பெருகு வதைக் கண்ட வெள்ளையர்கள் தங்கள் கம்பெனியின் கப்பல் கட்டணங்களை வெகுவாகக் குறைத்தனர். இந்திய வணிகர்களிடம் தரகர்களை அனுப்பிக் கெஞ் சினர். ரயில்வே நிலையத்தில் கையாட்களை அமர்த்தித் தங்கள் கப்பல்களில்தான் சுதேசிச் சாமான்கள் போவ தாகப் பொய்ப் பிரசாரமும் செய்தனர். அதனால், சுதேசிக் கம்பெனியாரும் ரயில்வே நிலையத்தில் தொண் டர்களை நிறுத்தி இந்திய வணிகர்களுக்கும் பிரயாணி களுக்கும் உண்மையைக் கூறித் தங்கள் கம்பெனிக்கு ஆதரவு தேடினர்.
போட்டியிட்டுக் கட்டணத்தைக் குறைத்தும், பொய் மொழிகள் புகன்றும் எண்ணம்கைகூடாமற்போகவே வெள்ளைக் கம்பெனியார் தங்கள் கப்பலில் பிரயாணி கள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகச் செல்லலா மென்று அறிக்கை விடுத்தனர். அதுவும் பயன் தர வில்லை. இந்த மாயவித்தைகளினால் மக்களின் மன உறு