58
கப்பலோட்டிய தமிழன்
சாரியார், வேங்கடாச்சாரியார் ஆகியோரும் சர்க்கார் தரப்பில் பாரிஸ்டர் பவல், ரிச்மண்ட் ஆகியோரும் தோன்றி வாதித்தனர்.
சாட்சி
சிதம்பரம் பிள்ளை தரப்பில், கவியரசர் சி.சுப்பிரமணிய பாநுதியார் உள்பட சான்றோர் பலர் கூறினர். பிள்ளைக்கு விரோதமாக சர்க்கார் தரப்பில் சாட்சி கூறியவர்களில் பெரும்பாலோர் போலீஸ் காரர்களும் பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி யைச் சேர்ந்த வெள்ளையர்களுமாவர். இந்த வழக்கு விசாரணை விவரங்களை தமிழ் நாட்டுப் பத்திரிகை களே யன்றி, இந்தியாவிலுள்ள எல்லாப் பத்திரிகை களும் விரிவாகப் பிரசுரித்தன. கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "யுகாந்தரம்" என்ற வங்காளிப் பத்தி ரிகை விசேஷ பக்கங்களில் கோர்ட்டு நடவடிக்கை களைப் பிரசுரித்து வந்தது.
ற
க
ஜூலை மாதம் 7-ந் தேதி நீதிபதி பின்ஹே தீர்ப்புக் கூறினார். சிதம்பரனார் குற்றவாளியெனத் தீர்மா னித்து, அரச நிந்தனைக் குற்றத்திற்காக இருபது வருடத் தீவாந்தரத் தண்டனையும், சிவாவுக்கு உடந் தையாக இருந்த குற்றத்திற்காக இருபது வருடத் தீவாந்தர தண்டனையும் விதித்து இரண்டு தண்டனை களையும் ஒன்றன்பின் ஒன்றாக (நாற்பது வருடம்) அனுபவிக்க வேண்டுமெனக் கூறினார். அரச நிந்தனைக் குற்றத்திற்காக சிவாவுக்குப் பத்தாண்டுகள் தீவாந் தரத் தண்டனை விதிக்கப்பட்டது.
செஷன்ஸ் நீதிபதி பின்ஹே அளித்த தீர்ப்பின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு:-