62
கப்பலோட்டிய தமிழன்
ராதமும் விதிக்கப்பட்டார். குருவும் சீடரும் ஒரே சமயத்தில் சிறைபுகுந்தனர். என்றாலும், குருவைவிட சீடரையே அதிகமாகப் பழி தீர்த்துக் கொண்டது ஏகாதிபத்தியம்!
தமிழ் நாட்டின் தனிப்பெருந் தலைவரான சிதம்பரம் பிள்ளைக்கு விதிக்கப்பட்ட கொடுந் தண்டனையால் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியா வெங்கணும் அதிர்ச்சி உண்டாயிற்று. பத்திரிகைகள் நீதிபதி பின் ஹேயின் தீர்ப்பைக் கடுமையாகத் தாக்கித் தலையங்கங் கள் எழுதின. அவற்றில் சில பின் வருமாறு:- ‘வங்காளி' :-‘நீதிபதி பின்ஹேயின் சித்தாந்தங்கள் இந் நாட்டில் அமுலுக்கு வரும் நாள், துரைத்தனத்தாருக் கும் மக்களுக்கும் கெட்ட நாளாகும். சுதேசிக் கைத் தொழில் வளர்ச்சிக்குப் பிள்ளை பாடுபட்டது குற்ற மானால், இந்தியர் அனைவரும் குற்றவாளிகளே.'
"பிள்ளையவர்களுக்கு
'அமிர்த பஜார்' : விதிக்கப் பட்ட கொடுந் தண்டனையால் பிரிட்டிஷ் நீதி அதிகா ரத்திற்கே அபகீர்த்தி உண்டாகி விட்டது., விடுதலை வேட்கையை வெளியிட்டதற்காக இரண்டு ஜென்ம தண்டனை ! இந்த அநீதி பிள்ளையைத் தவிர உலகில் வேறு எந்த மனிதருக்கும் நேர்ந்திராது.. அந்த வீரப் பெருமகனுக்குத் தலைவணங்குகிறோம். நீதிபதி பின் ஹேயின் கருத்துப்படி, பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பதிலாக சுதேச ஆட்சியை விரும்புவதே அரசநிந்தனை! பிள்ளை யைப் போன்று துன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு வரும் எதேச்சாதிகாரத்தின் பிரேதப் பெட்டியின் மேல் ஒவ்வொரு ஆணியை அறைகின்றனர்.