உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

65







கோலைக் கண்டித்துத் தலையங்கம் எழுதிற்று. அந்தத் தலையங்கம் நிறத் துவேஷம் பொருந்தியதாகவும், பலாத்காரத்திற்குத் தூண்டுவதாகவும் இருந்ததாக காரணங்காட்டி, ஆசிரியரைக் ஆசிரியரைக் கைது செய்து பத் திரிகை அலுவலகத்தையும் பூட்டி விட்டனர் போலீஸ் திகாரிகள். பின்னர் அந்த ஆசிரியருக்கு கடுந் தண் டனை விதிக்கப்பட்டது.

கவியரசர் பாரதியாரை ஆசிரியராகக் கொண்ட "இந் தியா' என்ற தமிழ் வாரப் பத்திரிகைக்கும் இதே கதி ஏற்பட்டது. பின்ஹேயின் தீர்ப்பைக் கண்டித்தும் சிதம்பரனாரைப் பின்பற்றி மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஈடுபட வேண்டு மென்று தூண்டியும் தலை யங்கம் எழுதியதற்காக அப்பத்திரிகையை வெளியிடு பவரான திரு. சீனிவாசய்யங்கார் தண்டிக்கப்பட்டார். இதன் விளைவாக, "இந்தியா" பத்திரிகையின் அலுவ லகம் பிரஞ்சு ஆட்சியின் கீழுள்ள புதுவைக்கு மாற்றப்பட்டது.

சிதம்பரம் பிள்ளைக்கு ஆயுள் அளவும் தீவாந்தரத் தண் டனை விதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அப்போது இந்தியா மந்திரியாக இருந்த லார்டு மார்லி என்பவர் மனம் பதைத்தார். அவர், ராஜப் பிரதிநிதி லார்டு மிண்டோவுக்கு பின் வருமாறு எழுதினார்:-

திருநெல்வேலி, தூத்துக்குடி மனிதர் (சுப்ரமணியசிவா, சிதம்பரம் பிள்ளை) இருவருக்கும் விதித்துள்ள தண்டனை யைச் சிறிதும் ஆதரிக்க இயலாது. அடுத்த மெயிலில் அத் தீர்ப்பு என் பார்வைக்கு வரும். அத்தண்டனைகள் நிலைக்கா