கப்பலோட்டிய தமிழன்
67
ஆகவே, சிதம்பரனார் குற்றவாளியென செஷன்ஸ் நீதி பதி பின்ஹே தீர்மானித்ததை நாங்களும் ஒப்புக் கொள்ளுகிறோம். எனினும், உடந்தைக் குற்றத்திற்கு விதிக்கப்பட்ட. 10 வருட தீவாந்தர தண்டனையை 6 வருடமாகவும், அரச நிந்தனைக் குற்றத்திற்கு விதிக்கப் பட்ட 10 வருட தண்டனையை 4 வருடமாகவும் குறைக்கிறோம். இவ்விரண்டு தண்டனைகளையும் ஒன்றின் பின் ஒன்றாக அனுபவிப்பதற்குப் பதிலாக ஏக காலத்தில் அனுபவித்தாற் போதும்."
எப்படியேனும், சிதம்பரனாரை விடுவிக்க வேண்டு மென்று அவாக்கொண்ட அவரது நண்பர்கள் ஹைக் கோர்ட் தீர்ப்பில் திருப்தி கொள்ளாமல் பெரு முயற்சி செய்து பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்த னர். அதன் பேரில், அந்தமான் சிறைவாச தண்டனை ஆறு வருடக் கடுங்காவல் தண்டனையாக குறைக்கப் பட்டது.
.
செக்கடியில் சிதம்பரனார்!
சிதம்பரனார், தமது தண்டனைக் காலத்தை கோயம் புத்தூர், கண்ணனூர் சிறைகளிற் கழித்தார். அந் நாளில் சிறைகள் தேசபக்தர்களால் நிரப்பப் பட வில்லை. ஆகவே, பிள்ளையவர்கள் தன்னந் தனிய ராய்த் தவங் கிடந்தார். இன்றுள்ள துபோல் வகுப்புப் பிரிவுகளும், பிற வசதிகளும் அன்றில்லை. அரசியல் கைதிகளுக்கெனத் தனி உரிமைகள் எதுவும் வழங்கப் படவுமில்லை. சிதம்பரனார் சிறையிற் பட்ட துன்பம் கொஞ்ச மன்று. கல்நெஞ்சம் படைத்த சிறையதி