கப்பலோட்டிய தமிழன்
75
((
கோபத்துடன், னியும் இப்படி அவனை வணங் கினால் செருப்பாலடிப்பேன்" என்று ஆத்திரத்தோடு கூறினார். ராமன், கோபத்தால் முணு முணுத்துக் கொண்டே போய்விட்டான்.
திருநெல்வேலி குழப்பத்தில் தண்டனையடைந்த கல கக் கைதிகள் பலரும் பலரும் அப்போது கோயமுத்தூர் சிறையில் இருந்தனர். சிரித்ததற்காக வ.உ.சி. தண்டனை பெற்றதும், அவரை வணங்கியதற்காக ராமனை ஜெயிலர்திட்டியதும் வேறொரு வார்டிலிருந்த அந்தக் கைதிகளுக்குத் தெரிந்தது. தங்கள் வீரத்தலைவ ரை தினந்தினம் சிறையதிகாரிகள் கொடுமைப்படுத்தி வருவதைக் கண்டு ஏற்கனவே குமுறிக்கொண்டிருந்த அவர்களுக்கு இந்தச் சம்பவங்கள் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போலாயிற்று. ஏனைய கிரிமி னல் கைதிகளும் வ உ.சி-க்குற்ற துன்பங்களைக் கேட்டு சீற்றம் கொண்டனர். எல்லோருமாகச் சேர்ந்து ஜெயிலரைக் கொன்றுவிடத் தீர்மா னித்தனர். ஒரு நாள் பிற்பகல் திடீரென்று பட்டது. ஜெயிலரின் அலுவலகம் தாக்கப் அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சிறைக் காவலர்களில் பெரும்பாலோர் விடுமுறையி லிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயிலர்மீது ஆத்திரம்கொண்ட கைதிகள் முன்னேற்பாட்டின்படி கலகம் செய்தனர். இரண்டு மணி நேரம் சிறை அமர்க்களமாயிற்று. அபாய அறிவிப்பு மணி இடைவிடாது அலறியது.
சுமார்