பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! | கப்பலோட்டிய தமிழன் 'மேலோர்கள்' 'நூலோர்கள்' என்று பாரதியார் பன் மையில் குறிப்பிட்டாலும், அவர் சிதம்பரனாரை நினை வில் கொண்டே கூறியிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், 'மேலோர்' 'நூலோர்' என்ற உயர்ந்த நிலையில் வைத்துப் பேசத் தக்கவர்கள் அந்நாளில் சிதம் பரனாரைத் தவிர வேறெவரும் சிறை புகுந்ததில்லை; செக்கு வலித்ததில்லை யல்லவா? 78 தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா !" என்ற முதலடி கொண்டு அவர் பாடியுள்ள பாடலும் நமது கண்ணீரைக் காணிக்கையாகக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அப்பாடலில், "கண்ணீரால் காத்த பயிர் கருகத் திருவுளமோ?" என்றாரே, அந்தப் பயிர் தான் வ.உ.சி. "ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது போல வந்த மாமணியைத் தோற் போமோ?" என்றாரே, அந்த மாமணி தான் வ.உ.சி. (: "எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரின் உள்வளர்த்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?" என்றாரே, அந்தவண்ண விளக்குதான் வ.உ.சி. பலாத்காரப் புரட்சி தமிழ்நாட்டில் தேசீயப் புரட்சியின் வித்தை விதைத்த சிதம்பரனாரை அரசாங்கம் சிறைக்குள் தள்ளியது. எனினும், புரட்சி அடங்கிவிடவில்லை. வெளிப்படை யாக அறவழியில் நடைபெற்ற சுதேசிக் கிளர்ச்சியை சர்க்கார் அடக்குமுறையால் நசுக்கவே, அறப்புரட்சி ஆயுதப் புரட்சியாக மாறியது. சிதம்பரம் பிள்ளைக்கு I