உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

95







'அன்னதானப் பிரபென்று யாவர்களும் கொண்டா டும், கர்னன் சிதம்பரவேள்" என்றும் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளனர்.

சிதம்பரனார், ஒழுக்கத்தில் சிறந்த உத்தமர். தற் புகழ்ச்சி,ஆடம்பரம், பொறாமை, புறங்கூறல் ஆகிய தீநெறிகள் அவர் நெஞ்சில் என்றும் இடம் பெற வில்லை. உண்மை உணர்தல், உணர்ந்த வழி நிற்றல், தீமையை எதிர்த்தல், பகைவருக்கும் அருளல் ஆகிய நன்னெறிகள், அவரிடம் நிரம்பி இருந்தன. மக்க ளிடையே தீநெறி போக்கி, நன்னெறி பரப்புவதற் கென்றே "விவேகபாநு என்ற மாதப் பத்திரிகை ஒன்றை சிறிது காலம் நடத்தினார். சிதம்பரனார் வேதாந்த மதத்தில் விருப்பங் கொண்டிருந்தார். சுவாமி வள்ளி நாயகம் என்பவர் வ.உ.சி.யின் பள்ளித் தோழர். வக்கீல் தொழில் நடத்திய போதும் இவ் விருவரும் இணைபிரியாத தோழர்களாகவே யிருந்த னர். பின்னர் வள்ளி நாயகம் வக்கீல் தொழிலைக் கைவிட்டு காஷாயமணிந்து துறவியானபோது, அவரையே தமது ஞான குருவாகக் கொண்டு சமய சாத்திரங்களைப் பயின்றார் வ.உ. சி.

தன்னல மறுத்தலும் பிறர் நலம் பேணுதலும் பிள்ளை யவர்களின் பிறவிக் குணம். தம்முடன் சிறைப்பட்ட சிவாவைச் சிறையில் விட்டுத் தாம் மட்டும் ஜாமீனில் வெளிவர மறுத்ததும், சுதேசிக் கப்பல் கம்பெனியை விட்டு விலகிக்கொண்டால் லட்ச ரூபாய் தருவதாக அந்நியக் கம்பெனியார் கூறியதை ஏற்க மறுத்ததும்