பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



92 கமலாம்பாள், சரித்திரம் லாசமாய் அவனுடன் விளையாட அவனுக்குக் கோபம் வருமா? கோபித்துக்கொள்பவன் போல் பலமுறை பாவனை பண்ணினான். அதற்கு அவர்கள், ' கோபித் துக்கொள்ளத் தெரிந்தால் கோபித்துக் கொள்ள வேணும், இல்லாவிடில் சும்மாயிருக்க வேணும்' என்று சொல்லிச் சிரிக்க, அவனும் சிரித்துக்கொண்டு அவர்களுக்குச் சரியாக விளையாட ஆரம்பித்தான். நாலாபக்கமும் அந்தப் பெண்களைத் துரத்திக்கொண்டு நின்று குத்திக்காளை' போலப்பாய்ந்தான் ; அவர் களைத் திருப்பி கேலிபண்ணினான். ஒருத்தியை பார்த்து "இரு இரு உன் அகமுடையானிடம் சொல்லுகிறேன் இரு' என்றான். இன்னொருத்தியைப் பார்த்து ' அதோ பார் அதோபார் உன்னகத்துக்காரர் வந்துவிட்டார்' என்றான். அவன் வெள்ளிப் பஞ்சபாத்திரத்தைக் கையில் ஓங்கிக்கொண்டு மார்பில் யோக வேஷ்டி. தரித்து அரையில் அலங்காரமாய்ப் பஞ்சகச்சம் உடுத்தி, குதித்துக் குதித்து ஓடியதும், அந்த அற்புத யௌவன பருவமுள்ள பெண்கள் பாதசரம் குலுங்கக் குலுங்க, கலீர் கலீர் என்று மெட்டிகள் சப்திக்க, 'விற்றவழ வாணிமிர மெய்யணிகள் மின்ன சிற்றிடை நுடங்க வொளிர் சீரடி பெயர்த்து ' அவனைச் சுற்றி ஓடி விளையாடியதும் ஒரு மின்னரசை பளீர் பளீர் என்று பாயும் பலமின்னல் சூழ்ந்தது போல வெகு அழ கான நேத்திரோற்சவமாயிருந்தது. இவ்விதம் ஸ்ரீநி வாசன், குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில் கோபிகா ஸ்திரீகளுடன் விளையாடியதுபோல் விளையாடிக் கடைசியாய் 'அந்த உள்ளுக்குத்தானே போகவேணும் என்கிறீர்கள் ; நானே போகிறேன், நீங்கள் விட்டு - விடுங்கள்' என்று சொல்லி லட்சுமியைப் பார்த்து உறக்க ' அந்த உள்ளுக்குப் போகலாம் வா' எனவே, எல்லாரும் பெண்டாட்டியோடு பேசினான். வெட்க -- மில்லாமல் பெண்டாட்டியோடு பேசினான்' என்று - விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதற்குள் தற்செய