உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



94 கமலாம்பாள் சரித்திரம் | எழுத்துக்கள் விகாரமாயும் பிழையாயுமிருந்தன. அதில் அடியில் வருகிறபடி எழுதப்பட்டிருந்தது :--- நீ இன்னிக்கு வெடி. காலம் அப்படித்தாநா எம் மேலே இடிக்கரது; அப்போது இடிச்சது எநக்கு இன் -னம் வலிக்கிறது: அழுகை கூட வருது. பொம்மண் டாட்டி குட்டிகளை துமுரிக்கிண்டு ஓடப்படாட்ட எந்தை இடிக்கச்சொல்லிருக்கோ. இந்தமே அப்படி. இடிக்கப்படாது, எல்லா குட்டிகளுக்கும் எதெரக்க எந்நோடு பேசாலாமா சீ இது எந்த லெட்சைக் கூத்து -- கல்யாணி (லட்சுமியின் மறுபெயர்). இந்தக் கடிதத்தை ஸ்ரீநிவாசன் பார்த்தவுடன் அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவன் கண்கள் கோபத்தால் சிவந்தன , உதடுகள் பட பட வென்று துடித்தன, கைகள் பதறின. இப்படிச் சிறிது நேரம் மௌனமாயிருந்து பிறகு பெருமூச்சு விட்டு சுப்பராயனைப் பார்த்து 'இதைப் பார்த்தாயா' என்று சொல்லி அவன் கையில் கடிதத்தை எறிந்தான். ஸ்ரீநி வாசன் படிக்கும்போதே கூடப்படித்த சுப்பராயன் மறுபடியும் அதைப்படித்துவிட்டு 'என்ன ஆச்சரியமா யிருக்கிறது, என்ன தைரியம்' என்றான். ஸ்ரீநிவாசன், "தைரியமட்டுமா , நீ யாம் நீ நீங்கள் என்று கூட எழுதக்கூடவில்லை. வயது போதாது. அவள் என்ன பண்ணுவாள். ரொம்ப பலமாய் இடித்து விட்டேன்! அவளா யிருக்கக்கண்டு பொறுத்தாள்? (கடிதத்தை வாங்கிக்கொண்டு) அழுகை வருகிறதாம். அழு, உன் னைக் கல்யாணம் பண்ணியதற்காக உன்னைக்காட்டி லும் எனக்கு அதிகமாய் அழுகை வருகிறது' என்றான். சுப்பராயன்.- 'அவள் தான் எழுதியிருப்பாள் -என்று நினைக்கிறாயா?' ஸ்ரீநிவாசன். - 'அவள் எழுதாமல் வேறே யார்