உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



98 கமலாம்பாள் சரித்திரம் ஆனந்த மயமாய் விளங்கும் தேவேந்திர சபைக்குச் சமானமாயிருந்தது. அங்கிருந்த ஜனங்களோ 'உடம் பொடு துறக்க நாடுற்றவரையு மொத்தார்' என்றபடி சரீரத்துடன் தேவபோகத்தை அடைந்தவர்களை யொத்தார்கள். தங்களுடைய கவலைகளையும் கஷ்டங் களையும் மறந்து 'ஆஹா! ஆமாம், ஆமாமாம், அப் படித்தான், நிஜந்தான் , அடடா , அப்பப்பா , பேஷ், பேஷ்,' என்றிப்படிச் சொல்லித் தன்னையறியாமல் -சிரக்கம்பம் கரக்கம்பம் செய்வதே அங்கு வந்திருந்த சகலருக்கும் தொழிலாக இருந்தது. "பரித்த செல்வ மொழியப்படரு நாள் அருத்தி வேதியர்க் கான்குல மீந்தவர் கருத்தி னாசைக் கரையின் மை கண்டிறை சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள் என்றபடி ஸ்ரீராமர் கொடுத்தும் திருப்தியடையாத வைதீகர்கள் கூட இந்தக் கல்யாணத்தில் 'உமக்கென்ன தட்சணை , உமக்கென்ன தட்சணை' என்று ஒருவரைப் பார்த்து ஒருவர், பல்லை இளித்துக்கொண்டு ரகசிய மாய்க் கேட்டு ' நல்ல தட்சணை , நல்ல மனசு, மகாராஜ னாக இருக்கவேணும்' என்று ஆசீர்வதித்து சந்துஷ்டி யடைந்தார்கள் என்றால் கல்யாணத்தின் சிறப்பு எப் படி இருந்திருக்கவேண்டுமென்பதை சொல்லவேண் டியதில்லை. பாடகர்கள் பிரம்மானந்தமாகப் பாட, விகட கவி மகாவுல்லாசமாக விகடம் செய்ய, திரு வாரூர்த் தேவடியாள் வெகு மனோரஞ்சிதமாய் ஆட, பிராமணோத்தமர்கள், தங்களுடைய நீண்ட கழுத்தில் ஆறு மாதத்திற்குப் போதுமான ஜலத்தைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் ஒட்டகங்களைப் போல, ஒரு வரு ஷத்திற்குக் காணும்படியான போஜனத்தை சுதாவாக சப்திக்கும்படியான தங்களுடைய கடவாத்தியங்க ளாகிய தொந்திகளில் சேர்த்துவைத்துக்கொள் பவர் போல போஜனம் செய்தார்கள் அவர்கள்