உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



12 மருந்தும் மாயமும், தீயும் திருட்டும் கல்யாணம் கழிந்தவுடன், சிறுகுளத்திலுள்ளோ ரெல்லோரும் மேளதாளத்துடன் இரண்டு மைல் தூரம் வந்து வழியனுப்ப சம்பந்திகள் மதுரை நோக் கிப் புறப்பட்டார்கள். அவர்கள் போன மறுநாள் ராத்திரி சுப்பிரமணியய்யர் தமது பள்ளியறையில் கல்யாண சிரமந்தீர வெகு பிரம்மானந்தமாய் நித்திரை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய உத்தம மனைவியாகிய பொன்னம்மாள் மலையிலே விளைந்ததானாலும் உரலிலேதான் வந்து மசியவேண் டும்" இத்தனை நாள் கல்யாணம் கொண்டாடினாலும் இப்பொழுதாவது வீட்டுக்குத்தானே வரவேண்டும், நம்முடைய கையில் அகப்பட்டுவிட்டார், இதுதான் சமயம், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண் டும், இது விட்டால் இனிக்கிட்டாது. ஆகையால் நன்றாய் அலங்கரித்துக்கொண்டு அவரிடம் சென்று நம்முடைய அழகாலும் பேச்சாலும் அவரை மயக்கி மறக்கடித்து மருந்தைக் கொடுத்துவிடுவோம், என்று யோசனை செய்து கொண்டு ஜாஜ்வல்யமாய்ப் பிர காசிக்கும் வயிரம், பச்சை, கோமேதகம் முதலிய நவ ரத்னங்களாலிழைத்த தனது சர்வாபரணங்ளையு மணிந்து அழகிய ஜவ்வாதுப் பொட்டிட்டு, அலங்கார மான வெண்பட்டுடுத்தி, தாம்பூலம்தரித்த தன் பவள உதடுதளில் இனிய மந்தகாசம் தவழ, பாதசரங்கள் கலீர் கலீர் என்று சப்திக்க, மெட்டிகள் ' பராக் எச்சரிக்கை பராக் எச்சரிக்கை ' என்று கட்டியங் கூற, கமகமவென்று காததூரத்துக்கு வாசனை வீச, கையில் தாம்பூலத்தட்டு ஏந்தி பூங்கொடிபோல்