பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'பேயாண்டி தேவன் தான் செய்திருக்கவேண்டும்' 113 தடுக்க ஒரு முக்கிய சாதனமாயிற்று. சுப்பிரமணியய் யர் பணக்காரர் தான். ஆனாலும் ஒரு நாளிரவில் 5000 ரூபாய் திடீரென்று கைவிட்டுப்போனால் யார் தான் வருந்தார்கள். அவர் வீட்டிலேயே களவு நடந்து அவர் வைக்கோற்போரிலேயே நெருப்பும் வைக்கப் பட்டிருந்ததால் அவருக்கு விரோதிகள் யாரோ அந்தக் காரியத்தைச் செய்திருக்கவேண்டும் என்று சிலர் அனு மானித்தார்கள். மற்றும் சிலர் திருடர்கள் திருடின பிற்பாடு யாராவது துரத்தி வருவார்கள் என்று எண்ணி அதைத் தடுக்கும்படி நெருப்புக் கொளுத் தினதேயன்றி வேறொன்றுமில்லையென்று தீர்மான மாய்ச் சொன்னார்கள். சிலர் உடனே திருடர்களைத் துரத்தவேண்டும் என்றார்கள். சிலர் அவர்கள் போயிருப்பார்கள் ஐம்பது மைல்' என்றார்கள். சிலர் பேயாண்டித் தேவன் தான் இந்தக் காரியம் செய் திருக்கவேண்டும் என்றார்கள். சிலர், அவன் கூடத் துணியமாட்டான், தெற்குச் சீமைக் கள்ளன்கள் தான் இவ்வளவும் பண்ணியிருக்கிறது, இல்லாவிட்டால் கோமளநாயக்கனூர் ஜமீன்தார் ஆட்களாயிருக்க வேணும் என்றார்கள். இப்படிப் பலர் பலவிதம் சொல் லிக்கொண்டிருக்க யாரோ ஆட்கள் ஓடிவருவதாகக் காலடி அரவம் கேட்டது. உடனே எல்லாரும் திடுக் கிட்டுத் திரும்பிப்பார்க்கவே கூட்டம் இருந்த இடத்தை நோக்கி இரண்டுபேர்கள் வெகு வேகமாய் ஓடிவருவதைக் கண்டார்கள்.